April 03, 2020

முஸ்லிம்களின் கோரிக்கைகளை மதவாதமாக்காதீர், இறந்தவர் உடலுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள்

1) ஒருவர் இறந்து விட்டால் அவரின் மரண கிரிகைகளில் கலந்து கொள்வதை ஒரு முஸ்லிம் இன்னொறு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று என இஸ்லாம் அதை வலியுறுத்தி பேசுகின்றது. 

2)  இறந்தவரை பற்றி கெட்டது பேசக்கூடது நல்லவற்றையே பேச வேண்டும் அவர் செய்த தவருகளை மன்னிக்க வேண்டும் என இஸ்லாம் உபதேசிக்கின்றது

3) இறந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று நாளைகளுக்கு அயலவர்கள் உணவு வழங்கி உதவ வேண்டும்.

4) இறந்தவரை அழகிய முறையில்  நல்லடக்கம் செய்ய  தயார்படுத்த வேண்டும்.

5) இறந்தவரை வாசனைத்திரவியங்கள் கொண்டு சுத்தம் செய்து குளிப்பாட்டுகின்றவர் அவரின் உடலில் உள்ள மறைவான குறைகளை அம்பலப்படுத்துவது இஸ்லாத்தில்  தடை செய்யப்பட்ட காரியமாகும்.

6) இறந்தவரின் கை, கால்களை நேராக்க  எலும்புகளை உடைப்பதை உயிருள்ளவரின் எலும்பை உடைப்பது  போன்று என இஸ்லாம் அதை தடை செய்துள்ளது. 

7) இறந்தவரின் உடல் நல்லடக்கத்துக்காக கொண்டு செல்லப்படுவதை காண்டால் அந்த உடல் எம்மை கடந்து   செல்லும் வரை எழுந்து நிக்க வேண்டும் அது முஸ்லிம் அல்லாதவரின் உடலாக இருந்தாலும் சரியே.

😎 இறந்தவரின் உடலை எமக்கு முன்னால் வைத்து  தொழுகை நடாத்தி அவருக்காக  பிரார்த்தனை செய்வதை இஸ்லாம் முஸ்லிம்களின் மீது கட்டாயக்கடமை என்கின்றது.  (இதை முஸ்லிம்களில் சிலர் செய்தால் போதுமானது )

9) இறந்தவரின் ஆரம்ப கிரிகைகள் தொடக்கம் அவரை நல்லடக்கம் செய்கின்றவரையுள்ள அனைத்துக் காரியங்களிலும் கலந்து கொள்வதை இஸ்லாம் மிகப்பெரிய நன்மையான காரியமாக சொல்கின்றது. 

10) இறந்தவரின் அடகஸ்தளத்தின் மீது அமர்வதை  இஸ்லாம் தடை செய்கின்றது. 

அன்பார்ந்த மதிப்பு மிக்க மாற்று மத  சகோதரர்களே..! 

இவ்வாக்கத்தின் நோக்கம் முஸ்லிம்கள் இறந்தவரின் உடலை எரிப்பதை ஏன் வெறுக்கின்றார்கள் என்பதை தெளிவுபடுத்துவதாகும். மேலே இலக்கமிட்டு நான் கூறிய விடயங்களை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் இவை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களாகும். 

இறந்தவரின் எலும்புகளை அவரை நேராக்கும் முகமாக உடைப்பதைக் கூட இஸ்லாம் தடை செய்துள்ள போது அந்த எலும்புகள் எல்லாம் எரிக்கப்பட்டுவதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. 

ஒரு மனிதனின் பிறப்பால் எப்படி குடும்பங்கள் சந்தோஷம் அடைகின்றதோ அது போல் தான் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவரின் இருதிக்கிரிகைகளை அவர் சார்ந்திருந்த மார்க அடிப்படையில்  செய்து முடிப்பதும்.

ஒருவரின் பிரிவில் மன ஆறுதல் அவரின் இருதிக்கிரிகைகளை சிறப்பாக செய்து முடிப்பதில் தான் அந்த குடும்பங்களுக்கு தங்கியுள்ளது. 

எனவே முஸ்லிம்களின் கோரிக்கைகளை மதவாதமாக ஆக்கிவிடாதீர்கள் எமது பணிவான கோரிக்கையை புரிந்து கொள்ளுங்கள் நுலம்புத் தொள்ளைக்கு கூட பட்மிட் பாவிப்பதில் கருத்து முரண்பாடுடையோர் நாம். நெருப்பால் ஒரு உயிரினத்தை அழிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.  இப்படியான இறைக்கோட்பாட்டை ஏற்றுள்ள நாம் எப்படி இறந்தவரை எரிப்பதை சுகாதார காரணங்கள் இன்றி ஏற்றுக் கொள்ள முடியும்..? 

அதே நேரம் Covid19 என்ற வைரஸ் தாக்கி மரணிப்பவரின் உடலால் நிலத்தடி நீர் மாசடையும் என்றோ இல்லை அடக்கம் செய்யப்பட்டவரின் உடலில் இருந்து மீண்டும்  அந்த வைரஸ் பரவும் அபாயமுள்ளது என்றோ மருத்துவ ஆய்வுகள்   முன்வைக்கப்படுமாயின் முஸ்லிம் சமூகம் அதை ஏற்றுக் கொள்ள தயாராகவே உள்ளது.

இன்திகாப் உமரீ

அட்டுலுகம  - பன்டாரகம

1 கருத்துரைகள்:

VIRUS KILLS PATIENTS, RACISM KILLS ALL

Post a comment