Header Ads



“வன்மம் கக்கும் நச்சுப் பாம்புகள் அரேபியர்களை கண்டு பயந்து பம்முவது ஏன்?” :

இப்போது வளைந்து, குனிந்து மன்னிப்பு கேட்பது மனம் திருந்தி அல்ல. விழுந்த அடி அப்படிப்பட்டது. இவர்களோடு சமசரம் செய்து பிழைத்தவர் எவரும் இல்லை.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், அரபு நாடுகளில் வசிக்கும் சில இந்தியர்கள் மத வெறுப்பு பரப்புரையில் ஈடுபட்டது கடும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து பலத்த எதிர்ப்பு கிளம்பவே தற்போது பா.ஜ.க ஆதரவாளர்கள் ‘திடீர்’ இஸ்லாமிய ஆதரவு வேடம் தரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா அதிகளவில் பரவ டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடுதான் காரணம் என்று இந்துத்வ ஆதரவாளர்கள் பலர் விஷம பிரச்சாரம் செய்து வந்தனர்.

அதேபோல் அரபு நாடுகளில் வசிக்கும் சில இந்தியர்கள் மத வெறுப்பு பரப்புரையிலும் ஈடுபட்டனர். அவர்களின் இச்செயலுக்கு மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள், மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவில் நடக்கும் மத வெறுப்பு பிரச்சாரங்களை கண்டித்தனர்.


மேலும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் இந்த விவகாரத்தில் களம் இறங்கியது. இந்தியாவில் இஸ்லாமியர்களை மத ரீதியாக பாரபட்சமாக நடத்துவதை கைவிட வேண்டும் என்றும், இஸ்லாமியர்களை அவதூறாக சித்தரிப்பதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டு என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியது.

இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் மத வெறிபிரச்சாரமும் வன்மக்கருத்துகளையும் பேசிவந்தார்கள் தங்கள் வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக மே17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி சமூக வலைதளங்களில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், “இஸ்லாமியர் மீது வன்மம் கக்கிக்கொண்டிருந்த நச்சுப் பாம்புகள் அரேபியரின் எதிர்ப்பைக் கண்டு ஏன் பயந்து பம்முகின்றன?. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சவுதி அரேபியா சென்றிருந்த மோடி நூறு பில்லியன் டாலருக்கு (7,65,000 கோடி ரூபாய் மதிப்பில்) இந்தியாவிடம் முதலீடு செய்ய சவுதி மன்னரைக் கேட்டிருந்தார்.

சவுதியும் ஒப்புக்கொண்டிருந்தது. மேலும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் 20% சவுதியின் ஆரம்கோ வாங்கி இருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் 75 பில்லியன் டாலர்கள் (5,70,000 கோடி ரூபாய்) இதுவே இந்தியாவில் சமீபத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் வெளிநாட்டு முதலீடு. சவுதி இந்தியாவுடன் வணிகம் செய்யும் நாடுகளில் நான்காவது பெரிய நாடாக இருக்கிறது.

மேலும் மோடியுடனான சந்திப்பில் சவுதி இந்தியாவில் குறிப்பாக கர்நாடகாவில் (தேஜஸ்வி சூர்யாவின் மாநிலம்) இரண்டாவது பெரிய எண்ணை சேகரிப்பு கேந்திரத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தியாவின் சரிவடையும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முஸ்லீம் நாடுகளின் முதலீடுகள் தேவை. 2024ம் வருடத்தில் இந்தியாவின் பெட்ரோலிய தேவை சீனாவை மிஞ்சிவிடும் நிலையில் இருக்கிறது. இப்படி இந்தியாவின் பெட்ரோலிய வர்த்தகமும், ரிலையன்ஸ் மார்வாடி கும்பலின் பொருளாதார நலனும் இவர்களோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது.

இதைவிட முக்கியமாக, இந்த வளைகுடா நாடுகளை பகைத்துக் கொண்டால், ‘காஷ்மீர் ஆக்கிரமிப்புப் பிரச்சனை’ சர்வதேச அளவில் எழுப்பப்பட்டுவிடும். வளைகுடா முஸ்லீம் நாடுகள் காஷ்மீர் பிரச்சனையை ஐ.நாவின் அனைத்து அவைகளிலும் எழுப்ப இயலும். இந்த நெருக்கடியை மோடி- பா.ஜ.க அரசினால் எதிர்கொள்ளும் வலிமையற்றது.

“வன்மம் கக்கும் நச்சுப் பாம்புகள் அரேபியர்களை கண்டு பயந்து பம்முவது ஏன்?” : திருமுருகன் காந்தி விளக்கம்! 
டெல்லியில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலையை கவனித்து வந்த சர்வதேசமும், வளைகுடா நாடுகளும் கொரோனா பிரச்சனையில் மேலும் முஸ்லிம்களை குறிவைத்ததால் எதிர்வினை செய்ய கிளம்பி இருக்கிறது.

சவுதியும், அமீரகமும் இதை எதிர்க்காமல் போகும் பட்சத்தில், துருக்கியின் தலைமையில் இயங்கும் இரண்டாவது முஸ்லிம் கூட்டணி நாடுகள் இந்தியாவை நோக்கி எழுப்பும் கேள்வியை இனிமேலும் இந்தியாவால் தவிர்க்க இயலாது.

ஒரு புறம் துருக்கியுடன் பகை, மறுபுறம் ஈரானுடன் நட்பு முறிவு, மலேசியா - இந்தோனேசியாவில் எதிர்ப்பு, உள்நாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் எனும் சூழலில் வளைகுடா நாடுகளையும் பகைத்துக் கொண்டால் இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவமும், பொருளாதார நலனும், காஷ்மீர் ஆக்கிரமிப்பும் கேள்விக்குரியதாகும். அதன் பின்னர், சங்கிகள் இந்தியாவின் எல்லையை கடக்கக் கூட இயலாது.

இதைவிட மார்வாடிகளின் பிசினஸ் நலனைக் காட்டிலும் இவர்களுக்கு ‘இந்துத்துவ வெறி’ முக்கியமில்லை. இன்னும் சொல்ல வேண்டுமெனில் இந்துத்துவ வெறியை வளர்ப்பதே மார்வாடிகளின் பிசினஸ் ஆதிக்கத்திற்காகத்தான். இதில் பிசினஸிற்கு இடையூறு நேருமெனில் ‘இந்துத்துவாவை’. ‘ஆர்.எஸ்.எஸ்’ கைகழுவக் கூடியவர்கள், மயிலாப்பூர், மாம்பலம் கும்பலை மட்டும் விட்டு வைப்பார்களா?

சுயநலம் என வந்துவிட்டால் நாட்டை விற்றுவிடுவர் இந்த பயங்கரவாதிகள், இப்போது வளைந்து, குனிந்து மன்னிப்பு கேட்பது மனம் திருந்தி அல்ல. விழுந்த அடி அப்படிப்பட்டது. இவர்களோடு சமசரம் செய்து பிழைத்தவர் எவரும் இல்லை.

அரபியரைப் பார்த்தாவது தமிழ்நாட்டின் பெரிய கட்சிகள் இவர்களை எதிர்கொள்ளும் வழிகளைக் கற்றுக் கொள்வது நல்லது. சுயநலக் கிருமிகளை பெரியாரைப் போல துணிந்து எதிர்த்து நின்று கையாள்வதைத் தவிர வேறு வழிகளை வரலாறு கண்டதில்லை. அரேபியாவும் இன்று இதைச் சொல்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. காஷ்மீர் பிரச்சினையை இஸ்லாமியப் பார்வயிலன்றி மனிதாபிமானப் பார்வையில் பார்த்தாலே போதுமானது. இந்தியர்களின் ஒரு சாரார் அற்ப சிந்தனை கொண்டவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அப்பாவிகளுக்கெதிராக அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.