Header Ads



எதற்காக அழுகிறாய் டிராம்பே...? பாலஸ்தீன சிறுவனின் கேள்வி - வீடியோ -


அமெரிக்க சரித்திர வரலாற்றிலேயே முதல் முறையாக, டிராம்ப் அறிவிக்கிறார். அமெரிக்காவின் 50 மாநிலங்கள் அனைத்தும் கொரோனாவால் கடுமையாக பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்திருக்கிறார்.

மெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. டிரம்பே! உன்னை நிலை குலையவைத்தது எது ! ? எதற்காக அழுகிறாய்? இந்த உலகிலேயே மிகப்பெரிய பலசாலி அல்லவா நீ ? கடுமையான பலம்வாய்ந்த அமெரிக்காவின் அனைத்து இராணுவ படைகளையும் நீங்கள் ஆட்டிப்படைக்கக் கூடிய சக்தி வாய்ந்தவரல்லவா !?

மக்களை பசியாலும், பட்டினியாலும் நிர்மூலமாக்கி, கொன்று குவித்து கும்மாளமிட்டு மகிழ்ந்தாயே! யாருடைய கண்ணாலும் பார்க்கமுடியாத கொரோணாவுக்காகவா அழுகிறாய்!?. இதற்கு முன் உனது இதயம் இளகியதே இல்லையா!?. உனது கையால் எத்தனையோ குழந்தைகள் கொல்லப்பட்டு, பசியுடன் எரிக்கப்பட்டு, மூழ்கடிக்கப்பட்டு அனாதையாக்கப்பட்டார்களே அப்போது அழுதாயா ?. பாலஸ்தீன பூமியிலே கேவலமான கொடூரமான அநியாயமான முறையில் அரங்கேற்றினாயே! அதை நீ கண்டும் காணவில்லைதானே!?.

டிரம்பே நீ அழு. அழு டிரம்பே! ஒரே ஒரு முறையாவது உணர்ந்து பார்! அனைத்தையும் அடக்கி ஆளக்கூடியவனை!. கண்ணியயமான ஏக இறைவனுக்கு முன்னால் பலவீனத்திலும்,இயலாமையிலும் அவனுக்கு முன்னால் நின்று நினைத்துப்பார். எங்களுக்கும் உனக்கும் உரிய இந்த படிப்பினையை . அந்த அல்லாஹ் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்.. அந்த அல்லாஹ் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்.


1 comment:

Powered by Blogger.