Header Ads



கொரோனாவினால் வாழ்கையில், ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பிறகு பிரிட்டனை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தங்களது வாழ்க்கைப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற சுமார் 4,000 மக்களில் வெறும் ஒன்பது சதவீதம் பேர்தான் கொரோனா வைரஸ் பரவலுக்கு முந்தைய வாழ்க்கை முறைக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதே வேளையில், கோவிட்-19 நோய்த்தொற்று கற்றுத் தந்துள்ள பாடத்தை முதலாக கொண்டு தங்களது வாழ்க்கை முறையில் மாற்றத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக 54 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையின் காரணமாக சுத்தமான காற்றையும், சமூக ஒற்றுமையின் அவசியத்தையும் உணர்ந்துள்ளதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில், உணவின் மதிப்பை உணர்ந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 40% மக்கள் தெறிவித்துள்ளனர். bbc

No comments

Powered by Blogger.