Header Ads



உயிர்த்த ஞாயிறு மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதல் தின நிகழ்வுகளுக்கான வழிகாட்டல்கள்தொடர்பாக


கடந்த வருடம் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சதனமான தாக்குதல் இடம் பெற்று ஒரு வருடமாகின்ற இச்சந்தர்ப்பத்தில் அத்தினத்தை சகலரும் கவலையுடன் நினைவு கூறும் முகமாக அனைத்து மதஸ்தலங்களிலும்  நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வக்ப் சபையும் முஸ்லிம் சமயப் பண்பாட்டளுவல்கள் திணைக்களமும், மஸ்ஜித்களிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு வேண்டி இருப்பதை யாவரும் அறிவோம். அதற்கிணங்க அந்நிகழ்வுகளை பின்வருமாறு அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டுகின்றது.

8:40 - 8:45 வரை கிராஅத். (இதில் சூரா மாஇதாவின் 32 வது வசனமும் மொழிபெயர்ப்பும், ஓடியோ இணைக்கப்பட்டுள்ளது).

8:45 - 8:47 வரை அமைதியாக இருந்து சப்தமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்காக துஆ செய்தல்.

8:47 - 8:55 வரை பாதிக்கப்பட்டவர்களுக்கான அனுதாபச் செய்தி. இதற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகளை பாவிக்கவும்.

வஸ்ஸலாம்.


அஷ-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

3 comments:

  1. Patam katturingala payankaravathigale

    ReplyDelete
  2. In my lifetime. The best eaver ACJU....

    ReplyDelete
  3. MR.Unknown
    நீர் நிச்சயமாக கிறிஸ்தவராக இருக்கமாட்டீர். இந்துவாகத்தான் இருப்பீர். கிறிஸ்தவர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றம் சொல்லமாட்டார்கள். இந்துக்களுக்குத்தான் இந்த கேவலமான புத்தி. fபாதர் மெல்கம் ரன்ஜித் அவர்களும் பொறுமைகாத்த கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களால் நன்றிக்கடன் பட்டவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.