Header Ads



கொரோனா என்ற, வார்த்தையை பயன்படுத்த தடை

துர்மெனிஸ்தான். இந்நாட்டை குறித்து பெருமளிவில் யாரும் கேள்விபட்டிருக்க வாய்ப்பில்லை. 1991 -ம் ஆண்டு வரையில் சோவியத் யூனியன் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்து வந்தது. அதன்பின்னரே தனியாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்த நாடாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி பாலைவனத்தினால் சூழப்பட்டுள்ளது. பல சிறப்புகள் இந்நாட்டில் இருந்தாலும், கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றது.

பத்திரிகை சுதந்திர நாடுகள் பட்டியலில் 2019 -ம் ஆண்டு துர்க்மெனிஸ்தானுக்குக் கடைசி இடம் கிடைத்தது. அதன் அண்டை நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தான் உட்பட உலகின் 200 நாடுகளில் கொரோனா பரவியுள்ள இந்தச் சூழலில், துர்க்மெனிஸ்தானில் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என்ற கூறுப்படுகிறது.

எனினும் உலக நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் துர்க்மெனிஸ்தானிலும் கொரோனா குறித்த பேச்சுதான் எங்கும் நிறைந்திருக்கிறது. இந்த நிலையில்தான் அந்நாட்டில் அரசு கொரோனா வைரஸ் என்னும் வார்த்தையைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அந்நாட்டின் சுகாதாரத்துறை, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் இருந்து கொரோனா வைரஸ் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

துர்க்மெனிஸ்தானின் அதிபர் Gurbanguly Berdymukhamedov, 2006-ம் ஆண்டுமுதல் பொறுப்பில் இருந்து வருகிறார்.அந்த நாட்டின் சர்வாதிகார தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

பொது இடத்தில் மாஸ்க் அணிவதும் கொரோனா குறித்துப் பேசுவதும் சட்டவிரோதம் என அறிவித்த முதல் நாடாக உள்ளது துர்க்மெனிஸ்தான்.

எனினும் கொரோனா தடுப்புப் பரிசோதனைகள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடப்பதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் ஊடகங்களும் கொரோனா வைரஸ் என்னும் வார்த்தையைப் பயன்படுத்த முடியாது என்பதால் மக்களுக்கு உண்மை நிலை தெரிய வராமல் போகும் என இந்த முடிவுக்கு எதிராக சில சுகாதார நிறுவனங்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.