Header Ads



கொரோனாவினால் முஸ்லிம்களும் வெறுக்கப்பட்டார்கள் - பிமல்

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலை தொடர்பில் கடற்படையினர் மீது குற்றஞ்சாட்டும் வகையில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்களுக்கு மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக கடும் கண்டனம் வெளியிட்டிருக்கிறார்.

அதேவேளை கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகப் போராடுவதற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற 'மக்கள் மத்தியிலான ஒருமைப்பாடு' என்ற ஆயுதத்தை வலுப்படுத்துவதற்கு முயற்சிப்போம் என்றும் அவர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகப் போராட வேண்டுமாக இருந்தால், அதற்கு  மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற ஆயுதம் மக்கள் மத்தியிலான ஒருமைப்பாடேயாகும். முதலில் அதனைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிப்போம்.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட பல்வேறு தரப்பினரும் கடற்படையினர் தொற்றுக்கு உள்ளாகியமையால் நாட்டில் வைரஸ் தொற்றுப்பரவல் அச்சம் அதிகரித்திருப்பதாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே அத்தகைய கருத்துக்களுக்குக் கண்டனம் வெளியிடும் வகையில் பிமல் ரத்நாயக மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

முதலில் சீனர்கள் வெறுக்கப்பட்டார்கள். பின்னர் தென்கொரியா மற்றும் இத்தாலியில் பணியாற்றும் இலங்கைப் பிரஜைகளும், அவர்களைத் தொடர்ந்து முஸ்லிம்களும் வெறுக்கப்பட்டார்கள். தற்போது கடற்படையினர் மீது வெறுப்பு உமிழப்படுகிறது. எத்தகையதொரு பாதிப்படைந்த சமுதாயமாக நாம் இருக்கிறோம்?

எந்தவொரு நாடும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகப் போராட வேண்டுமாக இருந்தால்,  அதற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற ஆயுதம் மக்கள் மத்தியிலான ஒருமைப்பாடேயாகும். முதலில் அதனைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிப்போம்.

No comments

Powered by Blogger.