Header Ads



சட்டமா அதிபர் திணைக்களம் மூடப்பட்டது

சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (20.04.2020) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிபுரிந்த தனியார் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு  கொரோனா வைரஸ்  தொற்று  இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்பட்டதையடுத்து மறு அறிவிப்பு வரும் வரை திணைக்களம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை திணைக்களத்தின் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அரச சட்டவாதிகளின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ( நிர்வாகம் ) ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன , நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.