Header Ads



லண்டனில் வபாத்தான சகோதரியின், ஜனாஸா நாளை புதன்கிழமை நல்லடக்கம்

- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

கொரோணா வைரஸ் காரணமாக மரணமடைந்த வாழைச்சேனையை பிறப்பிடமாகவும், லண்டனின் ஈஸ்ட்ஹாம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட தாதி உத்தியோகத்தரான மிஹ்ராஜியா முஹைதீன் (வயது 56) என்பவரது ஜனாஸா லண்டனில் நாளை புதன்கிழமை -22- நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோணா வைரஸ் காரணமாக லண்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று -20- திங்கட்கிழமை லண்டலின் மரணமடைந்துள்ளார்.

மிஹ்ராஜியா முஹைதீன் என்பவர் கிழக்கு இலண்டன் நியூஹாம் பல்கலைக் கழக மருத்துவமனையில் தாதி உத்தியோகத்தராக கடையாற்றி வந்த இவர், கொரோணா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் இவரது ஜனாஸா புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளைகளுமாக மூன்று பிள்ளைகளின் தாயான மிஹ்ராஜியா முஹைதீன் வாழைச்சேனையைச் சேர்ந்த சகோதரர் முபாரக்கை திருமணம் செய்து 1990ம் ஆண்டில் இருந்து லண்டனில் வசித்து வந்துள்ளார்.

கொரோணா வைரஸ் காரணமாக இவருடன் இருந்த வந்த கணவர் மற்றும் இளைய மகள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய இரண்டு பிள்ளைகளும் திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


1 comment:

Powered by Blogger.