April 02, 2020

ஆடுகள் ஒருபோதும் *சும்மா* இருக்கவில்லை...!

காடுகளில் உள்ள மரங்கள்  அழிந்துகொண்டே வந்தன. ஆனால் மரங்களோ  தொடர்ந்தும் கோடாரிக்கே வாக்களித்து வந்தன!

 ஏனெனில் கோடாரி; மரத்தினால் செய்யப்பட்ட தன் கைப்பிடியைக்  காட்டி "நானும் உங்களில் ஒருவன்தான்!" என எப்போதும் சொல்லிவந்ததை மரங்கள் உண்மைதான் என முழுமையாக நம்பின... மனதார நம்பின...!

*******பழமொழி******

குட்டிக் கதை

*ஆடுகள் ஒருபோதும் சும்மா இருக்கவில்லை!*

அழகிய அந்தக் காட்டிலே உயிரினங்கள் அனைத்தும் ஒற்றுமையாய் வாழ்ந்துவந்தன.

நரிகளின் ஊடகங்கள் மூலம் அவ்வற்புதக் காட்டிலே ஆடுகளை முன்வைத்து ஒவ்வொரு பிரச்சினைகள் தலைதூக்கின! அதற்கு ஆடுகள் வளைத் தளங்களிலே வீராப்புக்காட்டி தமக்குள் ஆறுதல் கொண்டன.

ஊடகங்கள் தொடந்தும் ஊளையிட்டன, மேலும் நரிகளை உருவாக்கிவிட்டன! ஆடுகளின் ஊசிச் சத்தம்  அவர்கள் காதில் எடுபடாது போயின. காரணம் ஆடுகள் ஒருநாளும் ஊடகங்களை உருவாக்காது என உறுதிகண்டிருந்தன. கிழமைக்கு ஓரு மணித்தியாலயத்தையேனும் காசு கொடுத்து வாங்காது என அறிந்திருந்தன.

மறுபுறம் ஆடுகள் எமக்கு ஊடகம் வானத்திலிருந்துதான் வரவேண்டும் என நப்பாசைப்பட்டன. 5 இலட்சம்  ஆடுகள் ஆயிரம்  போட்டாலே போதும் என்பதை கவனத்திலெடுக்காதிருந்தன. ஆனால் கண்டதெற்கெல்லாம் அதைவிடவும் அள்ளிக்கொடுப்பதில் முன்னிலை வகித்தன. அடிவாங்கியும் கொடுத்தன, அடிவாங்காமலும்  கொடுத்தன.

ஆடுகள் எப்போதும், அரசியல், பிரதேசவாதம் இயக்க மயக்கம் என தனித்தனிக் கூட்டங்களாய் பிரிந்தே நின்றன. ஏன் இப்படி என மான்களும் மரைகளும் கேட்க எல்லாம் ஆண்டவன் பெயரால் என வீராப்புப் பேசின. ஆடுகளின் பேச்சைக்கேட்ட அனைத்து உயிரினங்களும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டன.

சீனத்துப் பாம்பும் பன்றியும் பண்ணியவேலைக்கு தாம் பாரிகாரம் தேடும் நிலைக்கு ஆடுகள் ஆயின. காட்டின் அழகிய பல மான்களும் பசுக்களும் கூட “ ஏன் இப்படி ஆடுகள் இருக்கின்றன” எனக் கவலை கொண்டன... பரிந்துபேசி நின்றன.

சிங்கங்களோடு நின்றிருந்த ஆடுகளும் தமது கைக்குள்தான் சிங்கங்கள் என சிரித்து நின்றன. ஊடகம் ஒன்றின் தேவையை  சிந்திக்காது  விட்டன.

ஆனாலும் ஆண்டவனை ஆடுகள் மறக்கவில்லை! மறுபுறம் நெருங்கவும் இல்லை! ஒட்டகத்தை கட்டிவைத்துவிட்டு ஆண்டவனை நம்பு என்ற அமுதவாக்கை மட்டும் மறந்துவிட்டன!

ஆனால்  ஆடுகள் ஒருபோதும் சும்மா இருக்கவில்லை! தம் சமுதாயத்துக்கு

தம் சமுதாயத்துக்கு வழமைபோல் விடிவுகாலம் பிறக்கும் *எனும் கருத்தில் மட்டும் உறுதியாய் இருந்தன!.

அடுத்த பிரச்சினை எப்போது வரும் எப்படி வரும் அலசிக்கொண்டிருந்தன...

அப்படி வந்தால் அடுத்த உயிரினங்களை ஆறுதல்படுத்துவதெப்படி எனவும் ஆலோசித்துக்கொண்டிருந்தன!

இதற்காகவே கூட்டங்கூடி மந்தைகளை வழிநடாத்தி வந்தன.!

ஆனால் நரிக்கே ஊடகங்கள் இருக்கும்போது நமக்கேன் முடியாது என்பதை மட்டும் அசைபோடாதிருந்தன!

எனவே ஆடுகள் ஒருபோதும் *சும்மா* இருக்கவில்லை!

ரிஸ்வான் எம் உஸ்மான் - தெஹியங்க 
-- 

7 கருத்துரைகள்:

Well said. The top priority is a full time media network for the Muslim community

ஊடகங்கள் என்றால் என்ன என்று தெரியாத இந்த ஆடுகள் முகநூல் (Facebook) பக்கம் இருப்பதை நமது ஊடகம் என்ற நினைப்பு மாறும் வரை ஆடுகளுக்கென்று ஊடகம் கிடையாது

உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனாலும் ஆடுகளின் தலைமைகளாக பல கறுப்பு ஆடுகளே உள்ளன

Post a Comment