Header Ads



அல்லாஹ்வே உணவளிப்பவன் - இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவம்


இன்று வீட்டருகே வந்த மரக்கறி லாரி யில் எல்லாமே Fresh ஆக இருந்தது. ஊரடங்குச் சட்டத்திற்கு முன்னய காலத்தைவிட விலையும் மலிவாகவே இருந்தது. தேசிக்காய் மட்டுமே விலயாக இருந்தது. [1kh 500/=]. சுமார் 2 மணித்தியாலங்கள் தடபுடலாக வியாபாரம் நடைபெற்றது. ஏரியா மக்கள்  அதிகமானோர் பொருட்கள் வாங்கினர். 

அதில் குறிப்பிட்ட நபரொருவர் பச்சை கொச்சிக்காய்   மட்டுமே  50/= க்கு வாங்கிச் சென்றார். அவர் ஒரு தினக்கூலி. கையில் காசு இருக்க வாய்ப்பில்லை என்பதால் வேறு பொருட்கள் வாங்க வசதி இருந்திருக்காதென எண்ணிய நான் ஒரு சில காய்கறிகளை வாங்கி அவர் பின்னாடியே சென்று கையளித்த போது ஒருகணம் தயங்கியபடி  வாங்கிக்கொண்டார். 

இன்றைய தினம் ஒருவருக்காவது உதவிட முடிந்தது என்ற களிப்பில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். அல்ஹம்துலில்லாஹ்!

சற்றுமுன்னர் ( மஃரிபுக்குப் பின்னர்) என்னைத் தேடி வந்த அவர் ஹாஜி என்னிடம் கொஞ்சம் மரக்கறி இருந்ததினால் நான் இன்று மரக்கறி வாங்கல்ல. அதனால்தான் நீங்க தந்த பார்சலை வாங்கத் தயங்கினேன் என்றதோடு பக்கத்து வீட்டு இன்னார் கொஞ்சம் கஷ்டத்தோடு இருக்கிறார்.  எனவே நீங்க தந்த மரக்கறி பார்சல அவருக்கு கொடுத்தேன் என்றார்.

இந்த அசாதாரண சூழலில்  தனது அடுத்த வேலை கேள்விக்குறியாக இருக்கும்பட்சத்தில் அதனை சேமித்து வைத்திருக்க  முடியுமாயிருந்தும்  பக்கத்து வீட்டாரின் பசியாற்ற உதவிய அந்த ஏழை மிகவும் உயர்ந்து நின்றார்.

அசாதாரண சூழலைத் தாண்டி எல்லா காலங்களிலும் தினமும் எமது வாழ்க்கை மனிதநேயம் பேணி கழியுமாக இருந்தால்....

மனிதர்கள் மீது கருணை கொள்வோம். வானத்தில் உள்ளவன் எம்மீது கருணை கொள்வான்.

படித்ததில் வியந்தது

1 comment:

  1. கொடுங்கள் கொடுக்கப்படும்

    ReplyDelete

Powered by Blogger.