Header Ads



பாதுகாப்பு சாதனங்களை கோரி, பொறிஸ் ஜோன்சனிற்கு கடிதம் எழுதிய மருத்துவரும் உயிரிழந்தார்


கொரோனா வைரஸ் நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்கும் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையை சேர்ந்த பணியாளர்களிற்கு.தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களை வழங்கவேண்டும் என பிரிட்டிஸ் பிரதமரிற்கு வேண்டுகோள் விடுத்த மருத்துவரும் வைரசினால் உயிரிழந்துள்ளார்.

அப்துல் மபுட் சௌத்திரி என்ற 52 வயது மருத்துவரே உயிரிழந்துள்ளார்.

15 நாட்கள் மருத்துவமனையில் கிசிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

ரொம்போர்ட் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் தொடர்பிலான சிரேஸ்ட ஆலோசகராக பணியாற்றி வந்த மருத்துவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் சௌத்திரி இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையை சேர்ந்த பணியாளர்களிற்கும்  பாதுகாப்பு சாதனங்களை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இந்த உலகத்தில் நோயற்றவர்களாக தங்கள் பிள்ளைகள் குடும்பங்களுடன் வாழ்வதற்கான உரிமை தேசிய சுகாதார சேவையை சேர்ந்த பணியாளர்களிற்கு உள்ளது என மருத்துவர் பொறிஸ் ஜோன்சனிற்கான கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பின்னர்  தேசிய சுகாதார சேவையை சேர்ந்த மருத்துவர்கள் 18ற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ளன

1 comment:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹு ராஜுஊன்.அந்த டாக்டரின் தியாகத்தை ஏற்றுக் கொண்டு அன்னாருக்கு சுவனத்தை வழங்குமாறு பிரார்த்திக்கின்றோம். இந்தக் கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறையடி சேர்ந்த அத்தனை பேருடைய நற்செயல்களையும் பொறுந்திக் கொண்டு அவர்களுக்கு சுவனத்தை வழங்க வேண்டும் என நாம் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.