Header Ads



கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவ, அதிகாரிகள் முன்வைத்துள்ள யோசனை


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் பத்து படிமுறைகளை அறிவித்துள்ளது.

“சுத்தி மற்றும் நடனக்கோட்பாடு” என்ற பெயரில் இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உரிய தீவிரமான, சாத்தியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தாக வேண்டும் என்று அந்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது

தமது கோட்பாட்டின்படி,

80 வீதத்துக்கும் அதிகமாக சமூக இடைவெளியை பின்பற்றுதல்
நகரங்களுக்கு இடையிலான பயணங்களை குறைத்தல்
உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றாளர்ளை தனிமைப்படுத்தல்
நோய் தொற்றாளர்களை கண்டுபிடித்தல்
பரவல் தொடர்பிலான அடிக்கடி பரிசோதனைகள்
பொது இடங்களுக்கான பயணங்களை குறைத்தல்
உரிய சிகிச்சை திட்டம்
வருகைத்தரு இடங்களை மூடல்
மருத்துவம் அளித்தல்
போன்ற திட்டங்களையே அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இது வரையில் 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சித்த மருத்துவம் செய்பவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குங்கள். மிக விரைவாக இதனை நமது நாட்டில் இல்லாமல் செய்ய முடியும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.