Header Ads



அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, ரணில் பாராட்டு


கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உலகளாவிய நடவடிக்கையை உறுதி செய்யத் தவறியதாக, முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க விமர்சித்துள்ளார்.
உலகத் தலைவர்களும் சர்வதேச அமைப்புகளும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தலைமை வசிக்க முன்வரவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, இந்தியாவிலுள்ள ஊடகமொன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐக்கிய நாடுகள் போன்ற ஏதாவது ஒரு அமைப்பாவது முன்வரவேண்டும் என்றும் ஆனால் இதில் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

காலநிலை மாற்றம் என்று வரும்போது, அதற்கு தலைமைத்துவம் எடுப்பதற்கு பல அமைப்புகள் முன்வந்தன என்றும் ஆனால், இப்போது யாரர் தலைமைத்துவத்தை எடுக்கின்றனர் என்று அவர் கேள்வியெழுப்பினார்.

இது உலகளாவிய ரீதியான தொற்று நோயாக இருப்பதால், உலகத் தலைவர்கள் முன்வந்து, இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கம், சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த அவர், இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, ஜேர்மனியில் முன்னெடுக்கப்படும், மீண்டும், மீண்டும் சோதனை என்ற நடைமுறையை, இலங்கை பின்பற்றவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், நாட்டில் தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு, அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள முடக்கங்களை, ஓரளவு நீக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் எதிர்நோக்கிய உலகப்போர், வேறு பல நெருக்கடிகளுடன் ஒப்பிடும்போது, கொரோனா வைரஸ் தாக்கமே, மிகவும் சவாலானதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் உள்ளதாக என்பது தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்கள் இலங்கையில் உள்ளதா என்பது தொடர்பில் தனக்குத் தெரியவில்லை என்றும் ஆனால், ஆரம்பத்தில் சோதனை செய்யும் உபகரணங்கள், வென்டிலேட்டர்கள், முகக்கவசங்களைப் பெறுவறத்கு அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

No comments

Powered by Blogger.