Header Ads



உடல்கள் எரிப்பு - தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் சடலங்களை, தகனம் செய்வது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை, மீள் பரிசோதனை செய்யுமாறு, தேசிய சமாதானப் பேரவை, இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளது.

கொவிட் – 19ஆல் உயிரிழந்தவர்களின் உடலை, தகனம் செய்யவேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்புடைய ஒழுங்குவிதியை, சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம், சமய நம்பிக்கைகளுக்கு அமைவும் நாட்டில் ஒரு பகுதி மக்களின் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும் இல்லை என்றும் அத்துடன், ஒரு பகுதி மக்களை பாதிப்பதாகவும் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தத் தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு, முஸ்லிம் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கொவிட்-19 வைரஸ் பரவுவது குறித்து, விஞ்ஞான நிலைப்பாட்டை கருத்தில் கொள்வது, அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று தேசிய சமாதானப் பேரவை நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19ஆல் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைத்தல், தகனம் செய்தல் ஆகிய இரண்டு முறைகளை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கி, அதை பல நாடுகளும் கடைபிடித்து வருகின்ற நிலையில், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தீர்மானத்துக்கு முரணமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. They should open their heart, not the ears

    ReplyDelete
  2. Our hope on them has been cremated with their act of cremation. we all have turned towards the Almighty to beg hidayath for them and any proper solution for us.

    ReplyDelete

Powered by Blogger.