Header Ads



குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு நல்குவோம்

உள்ளக அமைப்பு ரீதியில் மக்களுக்கு மிக அண்மித்து சேவையாற்றும் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு கொவிட் -19 வைரஸ் தாக்கம் தொடர்பாக பாரிய அச்சுறுத்தல்கள் மற்றும் அபாய சூழ்நிலைகள் காணப்படுவதால்,  தமது கடமையை நிறைவேற்றுவதற்கு போதியளவு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குடும்பநல  சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவக்கு வேண்டிக் கொண்டார். 

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முழு சுகாதாரத்துறையையும் பொருத்த மட்டில் பொது மக்களுடன் மிக அண்மித்த தொடர்பை குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் வகிக்கின்றனர்.

சிறு குழந்தைகள் முதல் கர்ப்பிணித் தாய்மார் வரை மிக நெருக்கமாக நெருங்கிப் பழகுவதால் கொரோனா தொற்று பரவும் வாய்ப்புக்கள் அதிகமாகும். 

இருப்பினும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும்  திரிபோச வழங்குவது மற்றும் மருந்துவகைகள் வழங்குவது போன்ற பல பொருப்புக்களை அரசு ஒப்படைத்துள்ளதுடன் அவற்றை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது விடயமாக தமது அமைப்பு எதுவித தொழிற்சங்க கோரிக்கைளை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.