April 14, 2020

பத்தி எரியுது வயிறு - மனதை நெருடுகிறது

- அஜ்வத் முகம்மது ஷாஜஹான் -

காலத்தால போனா ராவக்கி வாற வேல.
நான் ஒண்டும் டொக்டரோ எஞ்சினியரோ இல்லீங்க !! சாதாரண கூலி வேலான் செய்யிற வாப்பா ! நாட்டுட நிலம போற போக்குல கொரோனா வந்து செத்தாலும் பரவால்ல பசியால சாக ஏலா தங்கம் !! 

நிவாரணம் எண்டு அரிசும் பருப்பும் விசுக்கத்தும் தந்தாங்க !
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அவங்களுக்கு அருள் புரியட்டும். அவுகளுக்கும் அதுக்கு பின்னால திரிஞ்ச புள்ளயள் எல்லாருக்கும் அவுகட புள்ளையளுக்கும்  அல்லாஹ் நல்ல ஆரோக்கியத்த குடுக்கட்டும் !!

அந்த புள்ளயள் அறவுட்டு வந்த காசில ஒழுப்பம் சாமான் வாங்கி எவ்வளவு பேருக்குத்தான் குடுக்குற !?? 
எண்டம்மாவே அந்த புள்ளயள் அதுக்கு பட்ட கஷ்டம் அல்லாஹ்குத்தான் தெரியும். ஒழுப்பம் எண்டாலும் அந்த சாமானால ரெண்டு நாள் அடுப்பு எரிஞ்சிச்சி தங்கமக்காள் !!

நாங்க வேலைக்கி போனா எங்குட வகுத்த நித்திர போற அளவுக்கு  ஒரளவுக்கென்டாலும் நெரப்பிக்கலாம் ஆனா வெளியாலயே போக ஏலாதே வாப்பா !!! அதான் என்ன செய்யிற எண்டு வெளங்கல. 

பக்கத்து ஊட்டுல இறச்சிம் கெழங்கும் பகலக்கிம் ராவக்கிம் மணக்குது. இன்னாங்க ஒங்களுக்கும் ஒழுப்பம் சோறும் கறியும் எண்டு அவங்களுக்கு தாறத்துக்கு மனசு வரல்ல. அவங்கள குத்தம் சொல்லல தங்கமக்காள் !!
செல நேரம் அது அவங்கட ஊட்டு புள்ளையளுக்கு காணுமோ என்னயோ?? 
ஆனா அவங்க மிஞ்சுற சோத்தையும் கறியையும் கோழி வளக்காங்க அதுக்கு கொட்டுற அதையும் நான் பாத்திருக்கன். பாபிக்கு எண்டு கோழியும் சுடுவாங்க. செரட்ட நான்தான் குடுக்குற. நம்முட பக்கத்து ஊடு எண்டுபோட்டு நான் காசிம் வாங்குறல்ல சும்மாதான் குடுக்குற. அல்லாஹ் நமக்கு நன்ம தருவான் தானே?? 

என்ட நாலு புள்ளயளும் இப்ப நான் சொல்லுறத கேக்குதுகள். ஒரு கெழமையா நான் சொல்லிக்கித்தான் இரிக்கன். நாம மட்டுமில்ல ஆருமே மூணு நேரம் திங்கல, ஒரு நேரம் தான் திங்கணும் எண்டு அரசாங்கம் சொல்லிருக்கு எண்டு. சின்ன வயசு தானே அதான் நம்பிக்கு இருக்குதுகள். எனக்கு வேற வழியும் தெரியல வாப்பா !! என்ட புள்ளயலயும் கொரோனாக்கிட்ட இருந்து காப்பாத்தணும். அதுக்காகத்தான் ஊட்டுக்குள்ள கெடக்கன். ஆனா பசி தாங்க ஏலாம இருக்குதே மக்காள் !!
எனக்கே தாங்க ஏலா எண்டா என்ட பொஞ்சாதி புள்ளயள்???? 

கடன் வாங்கி பழக்கமில்ல, ராசா. ஏனெண்டா எனக்கி மகுத்துக்கு பயம். கடன குடுக்காட்டி சொர்க்கத்துக்கு போக ஏலா எண்டு மவுலவி சென்னது நெனப்பு இரிக்கி. இப்ப இருக்கிற நெலமையில யாரு கடன் தருவா எண்டு நெனெச்சி அதையும் விட்டுட்டன் !! இருந்தாலும் அடுத்த தெருவுல இருக்கிற ஆட்டா ஓர்ர இபுறாகீம் காக்கா கிட்ட காசி கேப்பம் எண்டு போய் கேட்டா அவனுக்கிட்டயும் இல்ல மகன். அவனும் அண்டக்கி  அண்டக்கி ஆட்டா ஓடி தானே பொழப்பு நடத்துற !!!

பசி எங்களுக்கு புதுசு இல்ல மன, ஆனா இப்படி கெளம கணக்கா இரிக்கல. இதான் புதுசா இருக்கி. இந்த நேரத்துல என்ன வேலைக்கி கூப்புட்டாலும் போறத்துக்கு நான் வாறன் மகன். கக்கூசி கழுவுற எண்டாலும் பரவாயில்ல.ஆனா ஒண்டு மகன் அத வெளியில சொல்ல மாட்டன், எண்டு சத்தியம் பண்ணனும் அல்லாஹ் மேல. ஏனெண்டா எனக்கிம் ரோசம் மானம் இரிக்கி மன !

கேவி எடுத்தா ஒழுப்பம் வெட்டக்கெறங்கி பாப்பன் ரோட்டுல. அங்கால இஞ்சால எண்டு என்னெண்டாலும் வேலக்கி போவம் எண்டு பாத்தா ஒண்டுமே இல்ல மகன்.

கடக்கரக்கி போனா மீனும் அடிக்கிதில்ல. பாச வெச்சிக்கி கடலுக்கு போறதுக்கும் பயம்தான். ஜீஎஸ் சொன்னத நம்பித்தான் போற வாற. படிப்பறிவு இல்லானே அதால ஆக்கள் சொல்லுறத எல்லாம் கேக்கத்தான வேணும் !
ஆனா என்ட புள்ளயள நல்லா படிப்பிக்கணும் அதுக்காகத்தான் இவ்வளவு கஷ்டம் பர்ரன் மகன். 

என்ட  புள்ளயள் இப்ப இருக்கிற நிலையில ஆர்ரயும் புள்ளயள் இரிக்கப்படா எண்டு துவா செய்ரன். என்ட புள்ளயள் பசி தாங்க ஏலாம பர்ர பாடு எனக்கிம் என்ட மனிசிக்கும் என்னப் படச்ச அல்லாஹ்க்கும் தான் தெரியும். 

 ஆனா காச வெச்சிக்கி இருக்கிற ஆக்கள் எங்களுக்கு உரிய ஸக்காத், ஸதகா செஞ்சாலே போதும். நாங்க என்ன எண்டாலும் செஞ்சி பொழச்சிக்குவம்.  ஒண்டு மட்டும் உண்ம மன நாங்க தற்கொல, செய்ய மாட்டம். எண்டாலும் காசி வெச்சிருக்கிற ஆக்கள் நாங்க பட்டினியால மகுத்தாகினா பதில் சொல்லணும் அல்லாஹ்கிட்ட. அதான் எனக்கிம் பயம். அல்லாஹ் அவங்களுக்கு தண்டனய குடுத்துடாத !
ஏலும் எண்டா அவங்களுக்கு ஏழ பாழக்கி ஒதவுற மனச கொடு அல்லாஹ் !
இப்ப குடுக்குற,  காசி வெச்சிருக்கிற புள்ளையளுக்கு நல்லா பரக்கத் செய் அல்லாஹ் !

அதோட எங்கள போல ஏழபாழக்கி வாற பார்சல அவ்வளுக்கும் வேணும் எண்டு காசிக்காராக்கள் ஆரும் கேட்டா குடுங்க மக்காள்  !!!!
அல்லாஹ் நன்ம தருவான் !!
சொர்க்கத்தில போய் நான் என்ட குடும்பத்தோட நல்லா இருப்பன் மன !!!!😭😭😭😭

0 கருத்துரைகள்:

Post a Comment