Header Ads



கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சாய்ந்தமருதில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்

( அஸ்ஹர் இப்றாஹிம் ,பாறூக் சிஹான்)

சாய்ந்தமருது அப்துல் மஜீட் முஹம்மது சவ்பாத் சூரிய சக்தியைப் பயன்படுத்தி இயங்கக்கூடிய கொரோனா வைரசு பரவாமல் பாதுகாப்பாக இருக்கக்கூடிய கைகழுவும் தொட்டியொன்றை மிகவும் சிறந்த முறையில் தயாரித்து அசத்தியுள்ளார்.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரும் மாத்தறை பல்கலைக்கழக பிரயோக இயற்கை கல்வித்துறை மாணவருமான இவர் சூரியசக்தியை பயன்படுத்தி கிருமிநாசினி விசுறும் இயந்திரத்தை தயாரித்து இந்தோனேசியாவில் இடம்பெற்ற சர்வதேச கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தினை வென்று நமது நாட்டிற்கும் பிரதேசத்திற்கும் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்திருந்தார்.

தற்போது எமது நாட்டில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மையும் ஏனையோரையும் பாதுகாக்கும் வகையில் கைகளை நன்றாக கழுவ பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருந்தும் நீர்ப்பைபுகளை பயன்படுத்தும் போது கைகளை கழுவி விட்டு மீண்டும் அதே கைகளாலேயே பைப்பை மூட வேண்டியும் உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக நீர்த்தொட்டியின் முன்னுள்ள பலகையில் ஏறி நின்றதும் தானாகவே நீர்க்குழாயினால் நீர் வருகின்றது.பலகையை விட்டு காலை எடுத்ததும் நீர்க்குழாயில் நீர் வருவது நின்று விடுகின்றது.

இது குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் தேவையான இடத்திற்கும் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும் உள்ளது.

3 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Congratulations. இதனை tv யில் ஒளி பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.