Header Ads



உலக உதவி நிறுவனங்களுக்கு, ஜனாதிபதியின் வேண்டுகோள்

சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் செய்கின்றவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் கடன், பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளில் தங்கியுள்ள பொருளாதாரங்களை கொண்டுள்ள இலங்கை போன்ற இடர்நிலைக்கு உள்ளாகியுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி அவர்கள், கடன் தவணை உரிமையை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், உலக வங்கியின் தலைவர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மற்றும் இருதரப்பு கடன் வழங்கும் முன்னணி நாடுகளின் தலைவர்களின் இணக்கத்தை பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

மொஹான் சமரநாயக்க

பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

1 comment:

  1. சிங்கள இனவாதிகளின் வாய்களை நடக்காவிட்டால் கொரோனாவிற்கு பிறகான நிலையில் நாட்டை கட்டியெழுப்ப நிதியுதவிகள் கிடைக்குமென்பது கடினம்

    ReplyDelete

Powered by Blogger.