Header Ads



பிரதமர் மகிந்தவவை இன்று முஸ்லிம் தரப்பினர் பிரத்தியேகமாக சந்திக்கவில்லை - ஜனாஸா அடக்கத்திற்கு மறுப்பு

கொரோனாவினால் முஸ்லிம்கள் மரணித்தால் அவர்களை நல்லடக்கம் செய்வதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் முயற்சிகளை மேற்கோண்டனர்.

துகுறித்து முன்னாள் கொழும்பு மாவட்ட, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தவை வருமாறு,

அதில் ஓரு கட்டமாக இன்று வியாழக்கிழமை, 2 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் மகிந்தவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி முஸ்லிம் அரசியல்வாதிகள் அலரிமாளிகை சென்றனர். அப்போது கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மகிந்தவை பிரத்தியேகமாக சந்திக்க நேரம் தரும்படி ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் வலியுறுத்தினர். 

எனினும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே, முஸ்லிம் ஜனாஸாக்கள் பற்றி பேசலாம் என்றனர்.

கட்சிக் கூட்டம் நடந்தது. கொரோனாவினால் முஸ்லிம்கள் மரணித்தால் அவர்களை நல்லடக்கம் செய்வது பற்றி பேச்சு வந்தது. 

அதற்கு தடையாக உள்ள சுற்றுநிருபம் வாபஸ் பெறப்பட்டு, புதிய சுற்று நிருபத்தை வெளியிடுவதுடன், துறைசார் நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்து இதனை எதிர்கொள்வோம் என ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

இதன்போது உதய கம்மன்பில, பவித்திரா வன்னியாராட்சி, டொக்டர் அனில் ஜயசிங்க ஆகியோர் உடல்களை அடக்கம் செய்ய முடியாது எரிக்கவே வேண்டுமென்று அழுத்தம் பிரயோகித்தனர்.

இந்நிலையில்  ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய இறுதியில் எந்த அனுமதியும் கிடைக்கப் பெறவில்லை என்றார்.

1 comment:

  1. We have to recite Hisbun Nasar for the enemies of Islam that is the only solution.Those who know about Hisbun nasar, please inform others importance of reciting this.

    ReplyDelete

Powered by Blogger.