Header Ads



சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலிலே இறுதிச்சடங்கு - இறுதிக்கிரியை பற்றிய ஐ.நா.வின் ஆலோசனை கட்டளையல்ல

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குகள் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் மதத்தையோ அல்லது இனத்தையோ தொடர்புபடுத்தத் தேவையில்லை எனத் வலியுறுத்திய அஸ்கிரியபீடம்   இறுதி சடங்குகள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனை தெரிவித்துள்ளதே தவிர அது கட்டளையல்ல என்றும் குறிப்பிட்டது.

இறுதி சடங்குகள் குறித்த உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கையை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் மதம் மற்றும் நம்பிக்கை இ சுதந்திரத்திற்கான விசேட அறிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின்  மேலும்  கூறுகையில் ,

கொரோனா வைரஸானது இன, மத பேதமின்றி அனைவரையும் தாக்கியுள்ளது. எனவே இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத விழுமியங்களைப் பின்பற்றுவதை விட சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதே பொறுத்தமானதாக இருக்கும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றால் அவை தொடர்பில் ஆராயந்து அறிக்கை அல்லது ஆலோசனை வெளியிடப்படும். எனினும் அது கட்டளையல்ல. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் சுகாதாரத்துறையினருக்கு மாத்திரமே உள்ளது.

மேலும் எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பௌத்த மதத்தைச் சேர்ந்த எவரேனும் உயிரிழந்தால் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே இறுதி சடங்குகளை முன்னெடுக்குமாறு நாம் அரசாங்கத்திடம் தெரிவித்திருக்கின்றோம். எனவே இவ்விடயத்தில் இனத்தையோ அல்லது மதத்தையோ தொடர்ப்புபடுத்த வேண்டிய தேவை கிடையாது.

மத நம்பிக்கை என்பது அனைவருக்கும் காணப்படுகிறது. எனினும் இவ்வாறான நெருக்கடியான சந்தர்ப்பங்களில் இறைவனை மனதில் நினைத்து நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்தது. காரணம் இந்த வைரஸ் தொற்றினை ஒழிப்பதற்கு இது வரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அதன் அபாயகரத் தன்மையை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.

(எம்.மனோசித்ரா)

10 comments:

  1. உலக நாடுகள் தந்ததையும் வேண்டி திண்டதையும். முஸ்லீம் நாடுகள் தந்ததையும் வேண்டி திண்டதையும் மறந்திடீங்ளே நண்பா??? எங்கட கபுர் வணங்கிகள் அல்லாஹ்வின் சட்டத்தையும் மதிக்காம எத்தனை எத்தனை இப்தார் நிகழ்சிகள்! அது மட்டுமா உங்கள் எல்லோரையும் நடு பள்ளிவாசல் உள்ளே வைத்து துஆ பிரார்த்தனைகள்! எல்லாமே வீனாப்போச்சே நண்பா ??? ஆனாள் ஒன்று மட்டும் உன்மை மனிதன் மனிதனை திருப்தி படுத்தபோய் அதில் சும்மா இழிவு பாடமல் படைத்த அல்லாஹ் ஒருவன் மேல் தவக்கள் கொண்டு அவனை திருப்தி படுத்த முனைவதே ஈருலக வாழ்விழும் வெற்றிகிடைக்கும்.ஏன் என்றாள் அல்லாஹ் மட்டுமே வாக்குறுதி மாறாதவன்.

    ReplyDelete
  2. WHO என்பது உலக அனைத்து மருத்துவத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல்தர வைத்திய நிபுணர்களை கொண்டுள்ள நிறுவனமாகும். எனவே அவர்களின் அறிவுறுத்தல்கள் இலங்கை போன்ற வளர்ச்சி அடையாத நாட்டு வைத்திய துறையை விட சிறந்ததாகவே இருக்கும்.அத்துடன் அங்கத்துவ நாடுகள் அதன் அறிவுறுத்தல்களை பின்பற்றுவது அவசியம்.

    ReplyDelete
  3. அந்தா இந்தா என்று இருக்கிறார்கள் பொய்த்து சேருங்களே !

    ReplyDelete
  4. செவிடன் காதில ஊதின சங்குபோல.

    ReplyDelete
  5. நீங்களும் வைத்தியர்கள் அல்ல சாதாரன துறவிகளே

    ReplyDelete
  6. I am surprised why our so called leaders have not seek any legal opinion from supreme court until now? Any deal for political purpose??

    ReplyDelete
  7. நாங்களும் அதை தான் சொல்கிறோம். சுகாதார துறையே நீங்கள் விஞ்ஞான ரீதியாக நிரூபியுங்கள். புதைப்பதால் எப்படி பரவும் என்பதை.

    ReplyDelete
  8. இலங்கையில் பரவும் முஸ்லிம் விரோத வைரஸ் கொரோனாவை விடவும் ஆபத்தானது
    Darulaman.net


    ReplyDelete
  9. Pls do not magnify this issue anymore, and aggrieved party may seek legal redress if they think so. Let us Please take the word of Defense Secretary who assured that this cremation issue shall not be in effect after the COVID-19 is brought under control.

    ReplyDelete
  10. All are well united to opress Muslims.

    ReplyDelete

Powered by Blogger.