Header Ads



வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பமாகும் புதிய நடைமுறை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என விமான நிலையத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் வைத்தே பயணிகளிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகளின் சளி மாதிரிகளைப் பெற்றுக் கொண்டு அவற்றைக் கொண்டு பரிசோதனை நடாத்தி அவை குறித்த அறிக்கைகள் களஞ்சியப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் சர்வதேச குடிப்பெயர் அமைப்பு ஆகியனவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் தங்கியுள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக வெளிநாட்டு தூதரகங்களின் ஊடாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், விமான நிலையத்திலேயே பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தக்கூடிய ஆய்வகம் ஒன்றை உருவாக்கும் புதிய திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பயணி ஒருவர் நாட்டுக்குள் செல்வதற்கு முன்னதாகவே அவர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதனை கண்டறிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.