Header Ads



விசித்திரமான ஐயாயிரம்..


ஒரே வீட்டில்
ஒன்றாக இருந்த
குடும்பங்களை 
இரண்டாக பிரித்தது
சந்தோஷமாக
இருந்த
தாய் மற்றும் தந்தையை
விட்டும் வெவ்வேறாக்கியது
கோடீஸ்வரர்களை
பிச்சக்காரர்களைப் போல
நடிக்க வைத்தது
அருகில் இருந்த அதிகாரிகளை
மக்கள் மத்தியில்
எதிரிகளாக காட்டியது
மீட்டரை கடைப்பிடிக்க
வேண்டிய இடத்தில்
சென்றிமீற்றரில்
செருகி நிக்க வைத்தது
மணமுடித்துக் கொடுத்த
பிள்ளைகளை
வேறாக்கி விடு
என்று பெற்றோருக்கு
பாடம் சொல்லிக் கொடுத்தது
ஏழைகளையும்
பணக்காரர்களையும்
ஒரே வரிசையில்
நிற்க வைத்தது
உண்மையான
குடும்ப தொகையை
அறிய வைத்தது
இது விசித்திரமான
புதையல்
கொரோனாவால் 
பெறப்பட்ட
புதையல்
யாரோ 
பெத்த பிள்ளைக்கு
பெயர் வைத்து 
அழகு பார்த்து
அதில் ஆனந்தம் கண்டது
ஒரு ௯ட்டம்
அவதி, அழுத்தம், வெறுப்பு
அப்படியே அள்ளிப்போட்டாலும்
திருப்த்தி காணாத 
இன்னொரு
௯ட்டம்
இது ஒரு விசித்திரமான
ஐயாயிரம்தான்...

- ரஸீன் ரஸ்மின்

20/04/24

No comments

Powered by Blogger.