Header Ads



வைரஸ் கட்டுப்பாடுகளில் இருந்து தேவாலயங்களிற்கு விலக்களிக்கவேண்டும் - கலிபோர்னிய தேவாலய மதபோதகர்

கலிபோர்னியாவின் மதபோதகர் ஒருவர் வீடுகளிற்குள் இருப்பதற்கான உத்தரவினை மீறினார் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அவரது தேவாலயத்தில் பெருமளவானவர்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கலிபோர்னியாவின் மேர்செட் என்ற பகுதியில் உள்ள தேவாலயத்தில் பெருமளவானவர்கள் காணப்படுகின்றனர் என அருகில் வசிக்கும் பொதுமக்கள் தகவல் வழங்கினார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை தொடர்ந்து அந்த தேவாலயத்திற்கு சென்றவேளை ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது முழுச்சபையையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார் என அந்த பகுதியின் சட்டமொழுங்கிற்கு பொறுப்பான அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு வைரஸ் தொற்றியுள்ளது என்பது தெரியாமல் ஒருவர் வந்திருந்தால் கூட அங்கிருந்த அனைவரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முதல் நாள் தனது முகநூல் மூலம் அனைவரையும் வீடுகளிற்குள் இருக்குமாறு  குறிப்பிட்ட போதகர் கேட்டுக்கொண்டிருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இந்த சம்பவத்தின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அவர் எங்களிற்கு ஒன்றுகூடுவதற்கான உரிமையுள்ளது என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் இருந்து தேவாலயங்களிற்கு விலக்களிக்கவேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையை அவர் கண்டித்துள்ளார்

நான் மக்களை எனது தேவாலயத்திற்குள் மறைத்து வைத்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.