Header Ads



அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றுக்குள்ளானவர், முழு குணமடைந்து இன்று வீடு திரும்பினார்

 - பாறுக் ஷிஹான் -

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி  அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர்  வீட்டிற்கு மீள அனுப்பப்பட்டுள்ளார் கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அக்கரைப்பற்றை  சேர்ந்த ஒருவர்  முழுமையாகக் குணமடைந்து இவ்வாறு  இன்று வீடு திரும்பினர்.

வெலிகந்தை வைத்தியசாலையிலிருந்து கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு சொந்தமான  அம்புலன்ஸில் அக்கரைப்பற்றிற்கு  அழைத்துவரப்பட்டு அவரின்  வீட்டில் இறக்கிவிடப்பட்டார் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய  சுகாதார பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில்  கொரோனா வைரஸ் என அடையாளப்படுத்தப்பட்ட  சந்தேக நபர்கள் இருவர் சிகிச்சைகளுக்காக பொலநறுவை வெலிகந்த  ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்த பின்னர் சிகிச்சை பெற்ற பின்னர் சனிக்கிழமை(25) மாலை வீட்டிற்கு மீள அழைத்து செல்லப்பட்டார்.

இதில்  ஆண் இரண்டு கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வுகளின் மாதிரி  அறிக்கைகள்  வெளிவந்துள்ள இதில் ஆணிற்கு  நெகட்டிவாக அறிக்கையாக  வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில்  பின்னர்    ஆய்வுகள் திரும்பவும் செய்யப்பட்டு   அவர் குணம் அடைந்து விட்டார் என்ற அடிப்படையில் வீடு செல்ல  இன்று மாலை  அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு அனுப்பப்பட்டவர் பின்னர் அவர் வீட்டில் இரு கிழமைக்கு தனிமைப்படுத்தப்படுவார் என மேலும் தெரிவித்தார்.

இதே வேளை சிகிச்சை பெற்று வெளியேறிய  ஆணின் மனைவியும்  இவ்வாறு முடிவுகள் வரும் பட்சத்தில் இவ்வாறு தான் அவருக்கும் அந்த நிலைமை ஏற்படும்.இவர்களுடன் தொடர்புடைய 80 பேர் பொலநறுவை தமின்ன பகுதிக்கு சிகிச்சைக்காக அனுமதித்து இருக்கின்றோம்.

இவ்வாறான நெகடிப் பெறுபேறுகள் கிடைக்கின்ற போது நாமும் பெரும் மகிழ்ச்சி அடைவோம்.இது தவிர அக்கரைப்பற்று 19  பகுதி தனிமைப்படுத்தல் சூழ்நிலையை தற்போது எதிர்கொண்டுள்ள போதிலும் எதிர்காலத்தில் இத்தடையினை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவிக்க விரும்புகிறேன் என கூறினார்.

No comments

Powered by Blogger.