Header Ads



கொரோனாவின் கதை முடிந்து விட்டது என்று‌‌ நினைத்தால், நீங்கள் தப்பு பண்ணுகிறீர்கள்

மகா ஜனங்களே!

கொரோனாவின் கதை முடிந்து விட்டது, அதன் அபாயம் நீங்கி விட்டது அதனால் தான் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது என்று‌‌ நீங்கள் நினைத்தால் நீங்கள் தப்பு பண்ணுகிறீர்கள் !

ஊரடங்கு தளர்த்தப்படுவதானால் எல்லாம் சரியாகிவிட்டது என்று அஜாக்கிரதையாக இருந்து விடாதீர்கள். ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது என்பதற்காக முன்பு போல அயலவர் அல்லது உறவினர் வீடுகளுக்கு செல்வதையோ அல்லது அவர்கள் உங்கள் வீடுகளுக்கு வருவதையோ இப்போதைக்கு பழக்கப்படுத்தி விடாதீர்கள். அது போல நண்பர்களுடன் சேர்ந்து ஊர்சுற்றுவதற்கும், அரட்டை அடிப்பதை ஆரம்பிப்பதற்கும் இன்னும் காலம் கனிந்து விடவில்லை என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இவ்வளவு காலமும் வீடுகளில் எவ்வாறு இருந்தோமா, சமூக இடை வெளிகளைப் பேணி நடந்தோமோ அது போல இனி வரும் காலங்களிலும் இருந்து கொள்வதே நம் ஒவ்வொருவருக்கும் நல்லது என்பதை அடி மனதில் ஆழப் பதித்துக் கொள்ளுங்கள்.
வெளியே போக வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உங்கள் தேவைகள் முடிந்தவுடன் வீடு திரும்புங்கள். வீடு திரும்பியவுடன் முதல் வேலையாக குளித்து உங்களை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் காலனிகளை வீட்டினுள் எடுக்க வேண்டாம், அவைகளை வெளியிலேயே வைத்து விடுங்கள், நீங்கள் வெளியே அணிந்த ஆடைகளை வீட்டினுள்ளே பாவிப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இனி வரும் கொஞ்சக் காலமும் மிகவும் ‌ ஆபத்தானவை, அது போல அவதானமாக கையாள வேண்டியவை.

இந்த கால கட்டத்தில் நாம் எடுக்கின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நம்மை காப்பாற்றும். நாம் விடுகின்ற தவறுகள் நம்மை சீரழிக்கும்.

ஆகவே இனிவரும் நாட்களிலும் தனிமைப்படுவோம். வீட்டிலே இருந்து கொள்வோம். வெற்றி பெறுவோம்.

Dr PM Arshath Ahamed MBBS MD
குழந்தை நல மருத்துவர்.

No comments

Powered by Blogger.