Header Ads



எங்கள் மூவரையும், இவரோடு இணைத்து தருவீர்களா..?

காலையில் எழுந்ததும் காத்தான்குடி நண்பர் ஒருவரின் தொலைபேசி அழைப்பு வந்தது. 


மாவடிச்சேனையில் ஏதோ சம்பவமாமே என என்னிடம் விசாரித்தார். எனக்கு அது பற்றி தெரியாததால் அவரே விடயத்தையும் சொன்னார்

செய்தி மிக அதிர்ச்சியாக இருந்தது.

அழ்ழாஹ்வே இந்த செய்தி உண்மையாக இருக்க கூடாது என பிரார்த்தித்து கொண்டேன்.

தகவல் உண்மைதான் என முகநூலில் பல செய்திகள் நம்பவைத்தது.

இந்த பிஞ்சு குழந்தைகளை ஏன் இந்த நிலமைக்கு ஆக்கிவிட்டாய் அல்லாஹ் என மனம் பதறுகின்றது.

இந்த பதிவில் இட்டிருக்கும் படங்கள் நானே பிடித்தவைகள்.

2017.11.07 ம் திகதி அன்று இந்த குழந்தைகளுடன் அவர்களின் தந்தை எனது ஸரூடியோவுக்கு வந்திருந்தார்.

குழந்தைகளுடன் மிக பாசமானவர் என்பதை அவரது நடவடிக்கைகள் மூலமாக என்னால் அறிய முடிந்தது.

தான் கொண்டு வந்த ஒரூ பழைய புகைப்படத்தை என்னிடம் காண்பித்து எங்கள் மூவரையும் இவரோடு இணைத்து தருவீர்களா என கேட்டார்.

இவர் இவர்களின் உம்மாவா?இவர் வெளி நாட்டிலா ? என்று விசாரித்த போது இவரின் கண்கள் கலங்குவதை அவதானித்தேன்.

ஆமாம் இவர்களின் தாயே இவர். சுகயீனத்தால் மௌத்தாகிவிட்டார் என்றார்.

எனக்கு மிக கவலையாக இருந்தது.

எனக்கு இப்படியொரு படம் பிடிக்க வேண்டும் என்றொரு ஆசையால் உங்களிடம் வந்தேன் என்று கூறிக்கொண்டு பிள்ளைகளையும் அன்பாக அணைத்துக்கொண்டார்.

எனக்கும் அவரின் நிலை குறித்து கவலையாக இருந்ததுடன் அவர் , மனைவி பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தை அன்று கண்டு கொண்டேன்.

அவர் ஆசைப்பட்டபடி அவர்களை படம் பிடித்து கொடுத்த போது, அவர் அதனை நீண்ட நேரம் பார்த்து கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் அந்த படத்தை எடுத்துச்சென்றார்.

அப்படிப்பட்ட அந்த மனுசனா தன் அன்பான குழந்தைகளை இவ்வளவு கோரமாக கொலை செய்தார்?

என்னால் இன்னமும் நம்ப முடியவில்லையே!

அவரின் மனைவியின் பிரிவும் , குழந்தைகளின் நிலையும், எவரின் உதவியுமற்ற ஏழ்மை நிலையும்
அவரின் மனோ நிலையை பாதித்து இருக்கலாம் அல்லவா?

யா அழ்ழாஹ் பாவமறியாத அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு சுவனப்பூங்காவை வழங்கிடுவாயாக!!

Rio Mahroof


3 comments:

  1. இந்த பதிவை இட்ட சகோரரே இப்படியான ஒரு மிகவும் வறுமையில்,மனைவியையும் இழந்து,பிள்ளைகளை பார்ப்பதா அல்லது தொழிலுக்கு போவதா என பெரும் பிரச்சினையில் இருந்த அந்த மனிதருக்கு அவர்களின் குடும்பம் உதவா விட்டாலும் உங்கல் ஊர் சகாத்,பள்ளி பரிபாலன சபை ஏன் ஒரு உதவியை வழங்க வில்லை.மனம் வலிக்கும் ஒரு பெரும் அனியாயத்துக்கு அனைவரும் காரணமாகி விட்டோம்

    ReplyDelete
  2. Intha samukaththai Allah yen sothikkiran enpathai purinthu kontom

    ReplyDelete

Powered by Blogger.