Header Ads



முஸ்லிம்கள் வாழும் பகுதி, திட்டமிட்டு முடக்கம் - ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு


குருநாகல் மாவட்டம் - மடிக்கேவித்தியாலே பகுதி, காரணமின்றி முடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு சொந்தமான  கடையொன்று உள்ளது. பிரதேச கிராம உத்தியோகத்தர் புத்திக்க என்பவர் அக்கடை மீது கொண்ட தனிப்பட்ட எரிச்சலினால் கொரோனாவை தொடர்புபடுத்தி குறித்த பகுதியை கடந்த சில தினங்களாக முடக்கியிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த யாசீன் என்பவர் கவலை தெரிவித்தார்.

கிராம சேவையாளருடைய தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவே, இவ்வாறு முடங்கிப் போயுள்ளதாகவும், தமக்கு நிவாரணப் பொருட்கள்கூட விநியோகிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த  அநீதியான செயற்பாடு குறித்து பிரதேச மக்கள், ஜனாதிபதி செயகத்திற்கு தொலைபேசி மூலம் முறையிட்டுள்ளனர். அவர்கள் தமக்கு இதுபற்றி பக்ஸ் மூலம் அறியப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளனர்.

தமது பகுதியில் பக்ஸ் வசதியில்லாத நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு பக்ஸ் அனுப்ப, தாம் முயன்று கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

3 comments:

  1. சாதாரண விடயங்கல் அனைத்தும் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு கொரோனா எனும் பெயரில் அவிழ்த்து விடப்படிகின்ரன.

    ReplyDelete
  2. சாதி காரருக்கு கூலி கொடுக்க அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  3. வெறும் தொலைபேசி அழைப்புக்கு சட்ட நடவடிக்ைக எடுக்கும் அதிகாரம் பொலிஸுக்கு இருந்தால், ஏன் அத்தகைய ஒரு தொலைபேசி இன்றி பெக்ஸ் மூலம்தான் சனாதிபதிக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். பெக்ஸ் இல்லாவி்ட்டால் அநியாயம் செய்யும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதா?

    ReplyDelete

Powered by Blogger.