Header Ads



கொரோனா தனிமைப்படுத்தல் மீறுபவர்களை சுட்டுக் கொல்லலாம் - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உத்தரவு


கட்டுக்கடங்காத கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மீறுபவர்களை சுட்டுக் கொல்லலாம் என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

புதன்கிழமை இடம்பெற்ற தொலைக்காட்சி உரையின் போது வெளிப்படையாக பேசும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே இவ்வாறு மக்களை எச்சரித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு மக்களை வலியுறுத்திய ஜனாதிபதி, நடவடிக்கைகளை மீறுபவர்கள் மற்றும் கட்டுக்கடங்காத நபர்களை சட்ட அமலாக்க அதிகாரிகள் சுடலாம்.

ஆனால் சட்ட அமலாக்கத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று டூர்ட்டே வலியுறுத்தினார்.

யாராவது கட்டுக்கடங்காதவர்களாகி உங்களுடன் சண்டையிட்டால், உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அவர்களை சுட்டுக் கொல்லுங்கள் என காவல்துறை, இராணுவம் மற்றும் barangays-களுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

டூர்ட்டே உரையாற்றுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், தலைநகரான மணிலாவில் அரசாங்க உணவு உதவி குறித்து போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸில் கொரோனாவால் 96 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும், 2,311 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. We support the decision of the Philippines President which is nothing but absolute necessity to control the pandemic.

    ReplyDelete

Powered by Blogger.