Header Ads



வைத்தியர்களின் பரிந்துரை இன்றி, எந்தவொரு மருந்தையும் விநியோகிக்க வேண்டாம்

வைத்தியர்களின் பரிந்துரை இன்றி, எந்தவொரு மருந்தையும் விநியோகிக்க வேண்டாம் என, நாட்டிலுள்ள சகல மருந்தகங்களுக்கும் அறிவித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகளைக் கூறி மருந்துகளை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டுக்கு இடமளிக்க வேண்டாமென, மருந்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, வைத்தியர் பரிந்துரை செய்த பற்றுச்சீட்டுகளுக்கு மாத்திரம் மருந்துகளை விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

1 comment:

  1. If the OTC drugs need prescription who will pay the doc
    Will you instruct docs to issue prescription free of charge

    ReplyDelete

Powered by Blogger.