Header Ads



சில மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையரை திருப்பி, அனுப்புவதற்கான செலவை ஏற்க தயாராக உள்ளன

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீள இலங்கைக்கு கொண்டுவருவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கத் தவறியுள்ளதாக ஜே.வி.பி.யின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவர்கள் தங்கியுள்ள நாடுகளில் உள்ள தூதரகங்கள் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

அவர்கள் நாட்டிற்கு திரும்பும் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 60000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இது தவறான விபரமாகும்.

செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது பணி அனுமதி இல்லாமல் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களும் உள்ளனர்.

அவர்கள் அனைவரின் நலனுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 80 மில்லியன் ரூபா தொகையானது போதுமானதாக இல்லை.

சில மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையரை திருப்பி அனுப்புவதற்கான செலவை ஏற்க தயாராக உள்ளன.

இந்தியா, மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்று கூறியுள்ளார்.

1 comment:

  1. What is role of "sri lanka foreign employment bureau insurance" in this crucial time ?

    They take millions of rupees form these srilankans who are at present waiting to return to mother land. We do not hear any message from this institution... But they chast us at airport while we go to work outside for earning.

    We give them insurance money,
    We send foreign currency back to country..

    But .. they forget to help us... What kind of Inusrance they do ?

    ReplyDelete

Powered by Blogger.