April 18, 2020

முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிப்பு, ஐநா க்கு மகஜர் அனுப்பிய மெஸ்ரோ - கைது செய்யப்படுவாரா ஹரீஸ்..?


இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக  சகல முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் சமூக முக்கிய பல அமைப்புக்களும் அரசுக்கு தமது பக்க நியாயங்களை எடுத்துரைத்தும் அவை ஒன்றுக்கும் சாதகமான பதில்கள் கிடைக்காமல் உடல்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் விஞ்ஞன ரீதியாக முன்வைக்கப்பட்ட சகல தரவுகளும் நிராகரிக்கப்பட்டு உலகநாடுகளில் அவரவர் மார்க்கம்/ சமயம் கூறும் நிபந்தனைகளுடன் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்ற போதிலும் இலங்கையில் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது. 

இதனை கண்டித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் இஸ்தாபிக்கப்பட்ட மெஸ்ரோ- ஸ்ரீலங்கா அமைப்பினுடாக ஆன்லைன் முறையினுடாகவும், ஏனைய சில முஸ்லிம் அமைப்புகள் ஊடாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கையில் நடக்கும் உரிமைகள் மீறலை சுட்டிக்காட்டி நீதி கோரப்பட்டது.

 பின்னர் ஐக்கியநாடுகள் சபையின் மத கலாச்சார விடயங்களுக்கு பொறுப்பானவரினால் இலங்கை அரசுக்கு முஸ்லிங்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் காரசாரமான அறிக்கைகளும், கடிதங்களும் அனுப்பப்பட்டு அழுத்தம் வழங்கப்பட்டது. 

இந்நிலையில்   அம்பாறை மாவட்ட புலனாய்வு துறை அதிகாரிகள் மெஸ்ரோ ஸ்ரீலங்கா அமைப்பின் முக்கியஸ்தர்களை, அண்மைய நாட்களாக தொடர்ந்தும் விசாரணை செய்துவருவதாக அவ்வமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரதித்தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ், மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன், மற்றும் ஏனைய சில முஸ்லிம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை நேரடியாக சந்தித்து முஸ்லிங்களின் ஜனாஸா நல்லடக்க விடயத்தில் அக்கரை செலுத்துமாறு கோரியிருந்தமையும், அது சாதகமின்றி முடியவே, பின்னர் அரச வர்த்தகமானியில் கொரோனாவில் பாதித்த அல்லது பாதித்ததாக சந்தேகிக்கும் உடல்களை எரிக்கும் அறிவிப்பு வெளியானது. இதனால் மெஸ்ரோ, ஸ்ரீலங்கா அமைப்பினுடாக ஆன்லைன் முறையினுடாகவும், ஏனைய பல முஸ்லிம் சிவில் அமைப்புக்களினுடாகவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கையில் நடக்கும் மத உரிமைகள் மீறலை சுட்டிக்காட்டி நீதி கோரப்பட்டது. 

இது விடயமாக விசாரணை நடத்தி பாரிய அழுத்தத்தை வழங்கி முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களை சமூக விடயங்களில் தலையிடாமல் ஆக்குவதற்க்கும், முஸ்லிம் ஜனாஸா நல்லடக்க விடயங்களில் கரிசனை செலுத்துவோரை திசை திருப்பும் உத்தியாக இந்த விசாரணைகள் அமைந்துள்ளதாகவும் அப்பிரமுகர் மேலும் தெரிவித்தார்.

3 கருத்துரைகள்:

Above mentioned politicians are just Cardboard players. Now, they publicize what they did against cremation for their upcoming election propaganda.

அரசாங்கம் மேற்கொண்ட இந்த இனத்துவேசத்தின் உச்ச கட்டம் தனிமனிதன்,சமூகத்தின் மத உணர்வைக் குழிதோண்டிப் புதைத்தமை உலகில் அதிகாரம் படைத்த ஒரு தனிமனிதன் அல்லது அரசாங்கம் ஒருபோதும் செய்யக்கூடாத ஒரு பெரிய அநியாயத்தைத் திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது. இதற்கான உண்மையான அல்லது மிகவும் சரியான நடவடிக்கை என்ன என்பதை முஸ்லிம்கள் கூட்டாக ஆலோசித்து தீர்க்கதரிசனமாக அல்லது சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதோடு அதில் ஈடுபடுபவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பையும் உறுதி செய்து கொண்டு தான் இந்த காரியத்தில் ஈடுபட வேண்டும். சட்டத்தரணி ஹிஜாஸை கைது செய்த திட்டத்தின் பின்னால் உள்ள நோக்கத்தைச் சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.ஐ.நா.சபையும் அதன் சட்டங்களையும் இந்த அரசாங்கம் ஒருபோதும் மதிப்பதோ அல்லது அதன் விதிமுறைகளை மதிப்பதோ ஒருபோதும் இந்த அரசாங்கத்தின் திட்டங்களில் இல்லை என்பதை நாம் நன்றாகப் புரிந்து அதற்கேற்ப எமது செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

Please look the problem as a religious matter instead of blaming anybody. One day Allaah will give a solution Insha Allaah. Remember SL government banned face cover year ago now it is compulsory.

Post a comment