Header Ads



எமக்கும் தேர்தல் அவசியம், சாப்பிடவில்லை என்றால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்பிய பின்னர் தேர்தலை நடத்த முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமக்கு தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாவிட்டால் மக்கள் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

“தற்போது நோயாளிகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது தேர்தலை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

அதனை விசேட மருத்துவர்களின் பொறுப்பில் விட்டு விடுவோம். தொடர்ந்தும் பரிசோதனைகளை நடந்துங்கள் என்றே நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

குறைந்தது தினமும் 3 ஆயிரம் பரிசோதனைகளை நடத்த வேண்டும். அப்போது நிலைமையை அறிந்து கொள்ள முடியும்.

மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைமைக்கு கொண்டு வந்தால், தேர்தலை நடத்த முடியும். மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைமைக்கு கொண்டு வர வேண்டும். எமக்கும் தேர்தல் அவசியம்.

எனினும் பரிசோதனைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இடமளியுங்கள். முதலில் பொருளாதாரத்தை ஆரம்பிக்க வேண்டும். சாப்பிடவில்லை என்றால் மக்கள் வாக்களிக்க செல்ல மாட்டார்கள்.

பொருளாதார நிலைமைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போது மக்கள் வாக்களிக்க வருவார்கள்.

இதனால், கொரோனா நோயாளிகளை அடையாளம் காண பரிசோதனைகளை 3 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்.

இதுவும் போதாது, அதனை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Your inlucky politician.
    Your one of yahoodi agent in srilanka

    ReplyDelete
  2. இது முதலைக் கண்ணீர். மத்திய வங்கியில் கொள்ளை அடித்த இவருக்கு ஏன் இந்த கவலை?

    ReplyDelete

Powered by Blogger.