April 10, 2020

அக்குறணைக்கு மறுபெயர் சிறு மக்கம், அங்கே நடப்பவை என்ன...?

- சிறப்பு செய்தியாளர் -

கண்டி மாவட்டத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்டதும் முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றதுமான ஒரு பெரிய நிலத்தொகுதியே அக்குறணை எனலாம்.  எமது முன்னோர்கள் அக்குறணையை சிறுமக்கம் என்பார்கள். அந்தளவு அது காலா காலம் சிறப்புற்ற பாரம்பரியமாக குடிப்பரம்பலைக்கொண்ட பிரதேசமாக இருந்து வந்துள்ளது.

இங்கு ஏன் அக்குறணை நகரம் அல்லது அக்குறணை கிராமம் என்று குறிப்பிடாது பிரதேசம் என்கிறோம் என்பதில் அர்த்தம் உள்ளது. ஏனெனில் 35 கிராம சேகவர் பிரிவைக் கொண்ட அக்குறணை பிரதேச செயலாளர் பிரிவில் கூடுதல் கிராம சேவகர் பிரிவுகள் தனி முஸ்லிம் பிரதேசமாகவும் அடுத்தடுத்து துண்டிக்கப்படாமலும் உள்ள நெரிசல் மிக்க பகுதியாகும். கண்டி மாவட்டத்தில் உடுநுவர போன்ற தொகுதிகளை எடுத்துக்கொண்டால் பல்வேறு முஸ்லிம் கிராமங்கள் இருந்தாலும் அவை அடுத்தடுத்து தொடராக இருப்பதில்லை. இடையிடையே சிங்களக் கிரமங்களும் உண்டு. ஆனால் அக்குறணை ஒரு நிலப்பரப்பில் அடுத்தடுத்து பல கிராமங்களைக் கொண்ட தொடரான பகுதியாகும். இதில் குறிப்பிட்ட அளவு ஏனைய சமூகங்களுடன் இணைந்து வாழும் எல்லைக் கிரமங்களும் பல உள்ளன. 

இதனை விட முன்பு அக்குறணை என்றால் 6ம் கட்டையா? 7ம் கட்டையா? என்றெல்லாம் கேட்பார்கள். காரணம் கண்டி - யாழ்பாணம் ஏ-9 பாதையில் 6ம் மைல் கல் முதல் 9ம் மைல்கல் வரை அது வியாபித்திருந்தது. அது இன்று இன்னும் விரிந்து 5ம் மைல் கல் பகுதியான அம்பதென்னை முதல் 6,7,8.9. என்று சென்று 10ம் மைல்கல்லான அவவத்துகொடை வரை வியாபித்துள்ளது.(சுமார் 6 கிலோ மீட்டர்).  இது ஏ-9 பாதையில் நெடுக்காக உள்ள பகுதியாகும்.  அகலவாக்கில்  பார்க்கும் போது பூஜாப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு முதல் மறுபுறத்தில் மாத்தளை மாவட்ட எல்லையான உக்குவலையை தொடு;ம் வகையில்; வியாபித்துள்ளது. 

சுருங்கக் கூறின் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிரதேச செயலாளர் பிரிவைக்கொண்ட ஒரு தனிப்பிரிவு எனலாம்.  ஆரம்பகாலம் முதல் அக்குறணைக்கு பல சிறப்புக்கள் உண்டு. கசாவத்தை ஆலிம் புலவர் உற்பட பல சான்றோர்கள் வாழ்ந்த சான்றுகள் இங்குள்ளன. அதே போல் இன்றைய அரசியல் காலக்கட்டத்தில் 1960ம் ஆண்டு முதல் இன்று வரை (சுமார் 60 வருடங்கள்)  தொடர்ந்து  முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதியை கொண்ட பிரதேசமாகவும் உள்ளது. எப்போது மகாண சபை உருவாக்கப்பட்டதோ அன்று முதல் இன்று வரை பல மாகாண சபை அங்கத்தவர்களை கொண்ட பிரதேசமாகவும் உள்ளது. என்று பிரதேச சபை உருவாக்கப்பட்டதோ அன்று முதல் இன்று வரை பிரதேச சபையில் முஸ்லிம் அங்கத்தவர்களை பெரும் பான்மைiயாகக் கொண்டுள்ளதுடன் சபைத் தலைவராக முஸ்லிமகளே தொடர்ந்து தெரிவாகியும் வருகின்றனர்.  நூற்றுக்கும் மேற்பட்ட  வைத்தியர்களைக் கொண்ட ஒருபிரதேசமாகவும் உள்ளது.  இன்னும் துறை சார்ந்த பல பிரமுகர்களைக் கொண்ட பகுதியாகவும் உள்ளது.

இவை அனைத்தையும் விட அக்குறணையில் சிறப்பு தேசிய ரீதியில் அக்குறணை வியபாரிகள் நுழையாத இடங்களே இல்லை எனலாம்.  அதனை விட சிறப்பு என்ன வென்றால் சர்வதேச ரீதியில் எல்லா நாடுகளிரும் அக்குறணை பிரதேச வாசிகள் வாழ்ந்து வருவதுடன் வெளிநாட்டு செலாவணியை உழைத்துக்கொண்டு வருகின்றனர். வெறுமனே அங்கு கூலிகளாகவோ அல்லது சேவகர்களாவோ அன்றி வர்த்தகர்களாக அனேகர் உள்ளனர்.  தேசிய ரீதியில் வர்த்தகம் செய்து எல்லா இடங்களிலும்; இருந்து செல்வத்தை தமது ஊருக்கு கொண்டு வந்து சேர்ப்பது மட்டுமல்லாது தற்போது சர்வதேச நாடுகளில் வர்தகம் புரிந்து அதிலும் செல்வத்தை ஈட்டி தமது பிரதேசத்திற்கு கொண்டு வந்து சேர்கின்றனர். இதன் வெளிப்பாடாக பொறாமை உணர்வு எப்போதும் அக்குறணையை தொடர்ந்து தாக்கிவருகிறது.

எனவே தொடர்ந்து நீண்டகாலமாக அக்குறணை மீது காழ்புணர்ச்p கொண்டவர்கள் எப்போதும் அக்குறணையையும் அக்குறணை மக்களையும் விமர்சிப்பது ஒன்றும் புதிதல்ல. 

போதாமைக்கு நாட்டில் இனவாம் அதற்கு மேலும் தீணிபோட்டு வருவதும் மறுக்க முடியாத உண்மை. அக்குறணை பிரதேசத்தவர்கள் பொதுவாக மற்றவரில் தங்கி நிற்கும் நிலையும் குறைவு. இதுவும் பொறாமை மேலீட்டிற்கு ஒரு காரணமாகும் இவை அனைத்தும் சேர்ந்து அக்குறணை விடயங்களை பெரிது படுத்தி அல்லது இட்டுக்கட்டி கதை அளப்பவர்கள் அதிகம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மையாகும் 

அதன் காரணமாக கோடை வந்தாலும், வெள்ளம் வந்தாலும், தொற்று நோய்கள் வந்தாலும், டெங்கு வந்தாலும் விமர்சிக்கப்படுவது அக்குறணையே. காய்க்கும் மரத்திற்குத்தான் கல் அடியும் பொல் அடியும் என்பார்கள். எனவே பிரபலம் பெற்ற ஒரு பிரதேசம் விமர்சிக்கப்படுவது இயல்பு.  அக்குறணைக்கு வெளியில் இருக்கும் எமக்கு இது நல்ல பரிச்சயம்.   எனவே இன்றைய கொரோனா தொற்றிலும் அக்குறணை பற்றிய விமர்சனம் இல்லாமல் இருப்பின் அதுவே புதுமையாகும். 

நடந்தது இதுதான் அண்மையில் ஒருவர் வெளிநாடு சென்று இலங்கை திரும்பினார். கடந்த மார்ச் 13ம் திகதியின் பின் அவர் நாடு திரும்பியுள்ளார். ஏதிர்பாராத விதமாக அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தார். இதனை அவரோ அவருடைய குடும்ப அங்கத்தவர்களோ அறிந்திருக்க வில்லை. பின்னர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது தொற்று பற்றி உறுதியானது.  பின்னர் அத்தொற்று அவர் குடும்ப அங்கத்தவர்கள் சிலரையும் தொற்றி இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இதனை மையமாக வைத்து நோய் மேலும் பரவாதிருக்க அக்குறணை கிராமம் முடக்கப்பட்டது. திடீர் முடக்கம் காரணமாக அக்குறணை மட்டுமல்ல நாட்டில் சகல மக்களும் பாதிக்கப்பட்டனர். 

ஆனால் அக்குறணை பிரதேச சபை, அக்குறயை பிரதேச செயலகம், பொலீசார், சுகாதாரத்துறையினர், பள்ளி நிர்வாகம் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன முன்வந்து குறிப்பிட்ட சில விதி முறைகளுக்கு அமைய அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்கொண்டன. ஆனாலும் தனிப்பட்ட ரீதியில் சில அசௌகரியங்கள் ஏற்படாமலும் இல்லை. உதாரணமாக சில குறிப்பிட் மருந்து வகைகளை கொள்வனவு செய்வதில் இடர்பாடுகள் பேன்றன உண்டு. இது அக்குறணைக்கு மட்டுமல்ல பொதுவாக நாடுமுழுவதும் உள்ள பிரச்சினை. 

எனவே அக்குறணை பற்றிய அனேக செய்திகள் பொறாமை, இனவாதம், போன்ற காரணங்களால் திட்டமிட்டு பரப்பப்படுவதே அதிகமாகும்.  தற்போது நிலைமை ஓளைவு சீரடைந்துள்ளது. மக்கள் நலன் கருதி சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இதனை தவறாக விமர்சிப்பவர்களும் உண்டு. சுகாதார அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யும் வகையிலும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும் சில நடவடிக்கைளை எடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். அதனை தவறாக எடை போட முடியாது. 

எனவே அக்குறணை சிறுமக்கம் என்ற சிறப்புப் பெயர் பெற்ற ஒரு பிரதேசத்திற்கு காற்புணர்ச்சி காரணமாக சிலரால் பரப்படும் வதந்திகளே அதிகம் எனக்கருத இடமுண்டு. 

3 கருத்துரைகள்:

Ahhhhaahaha so so so all rich people ???? hmmm

Alhamdulillah; God's grace we hv enough for living and can help others with that wealth.

Post a Comment