Header Ads



பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில், வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் தொடர்பில் பிரதமர் அவதானம்

கொரோனா வைரஸை தொடர்ந்து வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீவிர அவதானத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் உரிய முறைக்கமைய அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்ட பின்னர் அதற்காக நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலிய MSC கப்பலில் சிக்கியிருந்த இலங்கை இளைஞன் விடுத்த கோரிக்கைக்கமைய அவரை மீட்க கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டதாக பிரதமர் கூறியுள்ளார்.

சமகால நெருக்கடி நிலையில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப எதிர்பார்த்தால் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்த பின்னர், சர்வதேச பாதுகாப்பு முறைக்கமைய அவர்களை அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் தற்போதைய நிலைமைக்கமைய உடனடியாக அனைத்து இலங்கையர்களையும் அழைத்து வருவதற்கான சந்தர்ப்பம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் ஒருவரையும் தனிமைப்படுத்த மாட்டோம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Awathanam thevai, ippotheiku allaipithal thewaiillai

    ReplyDelete

Powered by Blogger.