Header Ads



வெளவால்களை கூட்டம் கூட்டமாக அழிக்கும் மக்கள் - கண்டிப்பாக இது உதவாது என்கிறது ஜேர்மனி

கொரோனா பரவும் பீதி காரணமாக அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வெளவால்களை கூட்டம் கூட்டமாக அங்குள்ள மக்கள் அழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

மட்டுமின்றி உலகமெங்கும் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாலியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணம் வெளவாலாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்திருந்த நிலையில்,

தற்போது பீதி காரணமாக தென் அமெரிக்க நாடான பெருவில், மக்கள் ஒரு குகையில் தங்கியிருந்த 300 வெளவால்களை தீயிட்டு கொன்றுள்ளனர்.

பெரு நாட்டில் கொரோனா பரவலுக்கு இந்த வெளவால்களே காரணம் என அவர்கள் கருதியுள்ளனர். இதனிடையே இந்த தகவல் அறிந்து தேசிய வனவிலங்கு பாதுகாப்பு நிர்வாகிகள், அப்பகுதியில் உள்ள சுமார் 200 வெளவால்களை மீட்டு வேறு பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்துள்ளனர்.

இதனிடையே இந்தோனேசியாவில் ஒரு பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 193 வெளவால்களை மீட்டு, அரசு அதிகாரிகளே அவைகளை கூண்டோடு எரித்து கொன்றுள்ளனர்.

வெளவால்களே கொரோனா பரவலுக்கு காரணம் என ஊடகங்கள் பூதாகரமாக தகவல் வெளியிடுகிறார்கள் என்றால், கண்டிப்பாக இது உதவாது என்கிறார் ஜேர்மனியை சேர்ந்த வனவிலங்கு காப்பாளரும் ஆர்வலருமான Christian Voigt.

வெளவால்களில் மட்டும் 1,300 இனம் இருப்பதாக கூறும் அவர், இயற்கைக்கு அவை பேருதவி செய்கின்றன என்கிறார்.

மட்டுமின்றி அவைகள் ஒவ்வொரு இரவும் தங்களின் உடல் எடையில் பாதி வரை பூச்சிகளை உணவாக சாப்பிடுகின்றன.

ஜிகா, டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் இதில் அடங்கும் என்கிறார் Christian Voigt.

1 comment:

  1. மூடர் கூட்டம் . வௌவால்களை கொள்வதால் என்ன பயன்? அதை மனிதன் சாப்பிடுவதை தடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.