Header Ads



கொரோனவை சரியான முறையில் முகாமைத்துவம் செய்த, உலகின் முதல் நாடு என்ற பெருமை இலங்கைக்கு கிடைக்கும்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய ஒத்துழைப்புகள் மேலும் இரண்டு வார காலத்திற்கு கிடைத்தால், கொரோனவை சரியான முறையில் முகாமைத்துவம் செய்த உலகின் முதல் நாடு என்ற பெருமை இலங்கைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

தமது நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் குறைந்தளவிலேயே நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா நோய் அறிகுறிகள் இருக்குமாயின் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துக் கொள்ளுமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் இலங்கை ஓரளவுக்கான வெற்றியை பெற்றுள்ளமைக்கான காரணமாக, நாட்டு மக்கள் சுகாதார துறையினருக்கு வழங்கி வரும் ஒத்துழைப்புகள் எனவும் இந்த ஒத்துழைப்புகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசியம் எனவும் ஜயருவான் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.