Header Ads



மக்களை கட்டிலில் படுக்கவைக்க, நாங்கள் தரையில் படுப்போம் - மக்களின் நலனுக்காகவே ஊரடங்கு

” கடந்த 7 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றுடன் 338 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதில் 264 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களின் உறவினர்களாவர்.நேற்றைய தினம் 30 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர். அவர்களில் 22 பேர் கடற்படையினர்.ஒருவர் விமானப்படை சிப்பாய் .இதர 7 பேர் தொற்றுக்குள்ளானவர்களின் உறவினர்கள்.

நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டே ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது அமுலுக்கு வருகிறது.இருந்தாலும் இயன்றளவு விரைவில் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவோம்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் படையினர் தரையில் படுக்கிறார்கள் என்றும் அவர்கள் கவனிக்கப்படுவதில்லை என்றும் விமர்சனங்கள் சொல்லப்படுகின்றன.அது குறித்து நாம் தேடுகிறோம்.மக்களை கட்டிலில் படுக்க வைக்க நாங்கள் தரையில் படுப்போம்.அதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை.தரையிலும் காடுகளிலும் படுத்த அனுபவங்கள் எங்களுக்கு உள்ளன.

அரச புலனாய்வுத் துறையினரின் ஒத்துழைப்புடன் கொரோனா தொற்றுக்குள்ளானோரை பிடித்து வருகிறோம்.ஏனெனில் தொற்றுக்குள்ளானவர்கள் பலர் அவர்களுடன் பழகியவர்கள் விபரங்களை மறைப்பதால் இப்படி நடக்கின்றன.இயன்றளவில் நாங்கள் நிலைமைகளை கட்டுப்படுத்தி வருகிறோம்.ஊரடங்கு சட்டத்தை நீடிக்கவே மக்கள் கோருகிறார்கள்.நிலைமைகளை பார்த்து சரியான முடிவை அரசு எடுக்கும்.”என்றார் இராணுவத்தளபதி

sivarajah

No comments

Powered by Blogger.