Header Ads



சீனாவின் பொருளாதாரம், வேகமாக வீழ்ந்தது

1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர்  சீனாவின் பொருளாதாரம் முதல் தடவையாக தற்போது பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கொரோனா தொற்றின் காரணமாகவே, இவ்வாறு பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 6.8 சத வீதத்தால் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனால் சீனாவுக்கு  பாரிய  நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், உற்பத்தி மற்றும் விநியோக செயற்பாடுகள் பாரிய சரிவை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.