Header Ads



தேர்தல் ஆணைக்குழுவை, விமர்சிக்கிறார் விமல்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையைப் பயன்படுத்தி நிவாரணம் வழங்கும் போர்வையில், சில அரசியல் வாதிகள் அரசியல் நடத்துவதாக, தேர்தல்கள் ஆணையகம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, அமைச்சர் விமல் வீரவன்ச விமர்சித்துள்ளார்.

“தேர்தல்கள் ஆணையகம், தற்போது அரசியல் செய்கின்றது. நாடு ஒரு சர்வாதிகாரப் பாதையை நோக்கி செல்வதாக, தேர்தல் ஆணையகத்தின் உறுப்பினர் ஒருவர், பி.பி.சி இணையத்தளத்துக்கு செவ்வியொன்றை வழங்கியிருந்தார். திடீரென, தேர்தல் ஆணையகத்தின் தவிசாளர், இதில் அரசியல்வாதிகள் ஈடுபடக்கூடாது எனக் கூறியிருந்தார். நாம் இங்கு அரசியல் செய்யவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில், அரசியலில் ஈடுபடும் நிலையில் நாம் இல்லை” என்று அவர் கூறியிருந்தார்.

இப்போதுள்ள சூழ்நிலையை, அரச அதிகாரிகளால் தனியாக முகாமைத்துவம் செய்ய முடியாது என்பதால், ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அனைத்து அரசியல்வாதிகளும் இந்தச் சமுதாயத்துக்குத் தலைவர்களாக நடந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. GiverGover officials can manage any situation. Because around 1.5 millions government servents are here now

    ReplyDelete
  2. Government officials can manage any situation. Because around 1.5 millions government servents are here now

    ReplyDelete

Powered by Blogger.