Header Ads



இலங்கையில் சகலருக்கும், கொரோனா பரிசோதனை நடைபெறுமா..? Dr அமல் ஹர்ஷவின் விளக்கம்

இலங்கையிலிருக்கும் சகலருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைமையைத் தயாரிப்பதற்காக, பிரதிச் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அமல் ஹர்ஷ டீ சில்வா தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவொன்றையும் சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.

சிறு சிறு குழுக்களின் ஊடாக, முழு நாட்டு மக்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் முறைமையைத் தயாரிக்குமாறும், அக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறு சிறு குழுக்களை அமைத்து, ஜேர்மனியில் இவ்வாறான பரிசோதனைகள் முன்னெடுக்கப் படுகின்றனவென, வைத்திய அமல் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரையில், அரச மற்றும் தனியார் வசம், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடிய இயந்திரங்கள் 50 மட்டுமே உள்ளன என்றும் அவற்றை வைத்துகொண்டு, ஒரு நாளைக்கு 250 பரிசோதனைகளை மட்டுமே முன்னெடுக்க முடியும் என்றும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.