Header Ads



அதிக உயிரிழப்புகளில் முதலிடம் - அதிரும் அமெரிக்கா

உலக அளவில் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகள் சந்தித்த நாடுகள் பட்டியலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்திற்கு சென்றுள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில வாரங்களாக கோரத்தாண்டவம் ஆடி வந்தது. அந்நாடு கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது.

ஆனால் தற்போது கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கிக்கொண்டுள்ளது. அந்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.

இந்நிலையில், கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியிலில் இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்துக்கு சென்றுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, இத்தாலியில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 271 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19 ஆயிரத்து 468 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 5 லட்சத்து 22 ஆயிரத்து 320 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 20 ஆயிரத்து 86 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்துக்கு சென்றுள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

4 comments:

  1. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். என்பதை தயவு செய்து மறந்து விடாதீர்கள்.we are the super power of the world என்று நீங்கள் சொல்லலாம்.அதை அல்லாஹ் தான் முடிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. We hope quick recovery for innocent Americans, and also request them to take good lesson from this tragedy, and advise them to be vigilant in electing constructive motivated quality leaders than destructive motivated psychos...

    ReplyDelete
  3. #சாலையெல்லாம்_பிணங்கள்

    கொத்துக் கொத்தாக அமெரிக்காவில் மரணம்.. நேற்று மட்டும் ஒரே நாளில் 1255 நபர்கள் மரணம்.
    நேற்றைய நாளில் புதிதாக கொரோனா நோயால் புதிதாக பிடிக்கப்பட்டவர்கள் மட்டும் 30.000..

    இன்றைய அமெரிக்க தலைமுறை மக்கள், அமெரிக்கா அல்லாத வெளிநாட்டில் அமெரிக்கர்களால் கொல்லப்படும் செய்தியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்துப்பார்கள். முதல்முறையாக அமெரிக்கர்களின் கண்னிரையும், கதறலையும் பார்க்கிறார்கள்..

    ஒவ்வொரு முறையும் பிற நாடுகளில் கொத்து கொத்தாக கொலை செய்து விட்டு, அன்றைய தினம் மகிழ்ச்சியோடு உறங்கிய மக்களுக்கு, தன்னால் அழிக்கப்படும் இடங்கள் என்னவெல்லாம் வேதனைப்படும் என்பதை முதல்முறையாக தன் சொந்த நாட்டிலே பார்க்கிறார்கள்.

    கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்ப்பட்ட மரணத்தை விட, அமெரிக்கர்களால் இந்த உலகத்தில் இறந்து போன பொதுமக்கள்தான் அதிகம்..

    ஈராக், ஈரான், மியான்மர், வியட்நாம், கியூபா, மெக்சிக்கோ, வெனிசுலா, லெபனான், பாலஸ்தினம், வட கொரியா இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நாடுகளுக்கு எல்லாம் மருத்துவத்தடை விதித்த நாடு அமெரிக்கா..

    அதாவது மருத்துவத்தடை என்றால், எந்த நாட்டு மருத்துவர்களும் இந்த நாட்டு மக்களுக்கு மருத்துவம் செய்யக் கூடாது. மேலும் இந்த நாடுகளுக்கெல்லாம் மருந்து பொருட்கள் கொடுக்கக்கூடாது. மருத்துவம் சம்பந்தமான எந்த சிறு உபகரணங்கள் கூட கொடுக்கக் கூடாது என்றே தடை. எத்தனை பெரிய கொடுரமான தடை என்று நீங்கள் உணருங்கள்.

    அதன் கொடுரத்தை இன்று அமெரிக்காவே உணர்ந்துள்ளது. மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் இந்தியாவிடமும் கையேந்தி விட்டது.. சீனாவிடம் கையேந்தி விட்டது.. மருந்து பொருட்கள் தடையால் பிற நாடுகள் எவ்வளவு பாதிக்கப்பட்டுருக்கும் என்பதை தன் பாதிப்பில் பாடம் கற்றுக் வருகிறது..

    சிரியாவில் இன்று அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் 2000000 பேர் மரணம். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில் குறைந்தது 3000000 கொல்லப்பட்டனர் என்ற செய்தியை நாம் பார்த்துருக்கிறோம். அதை ரசித்து விட்டு அமெரிக்கர்களும் கடந்துருப்பார்கள்..

    ஆனால் இன்று உலக மக்கள் யாரும் அமெரிக்காவின் மரணத்தை ரசிக்கவில்லை. மாறாக அனைத்துலக மக்களும் அமெரிக்காவிற்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்

    உலகம் இதற்கு முன், இதுபோன்ற ஒரு பாதிப்பை சந்தித்த பொழுது தான், அதை தனக்கு சாதகமாக்கி அமெரிக்கா வல்லரசானது. பிறர் பாதிப்பில் தான் நாம் வல்லமை பெற முடியும் என்று நினைத்த அமெரிக்கா. வல்லமை அடைந்தது. வல்லரசும் ஆனது..

    நம்மை போல் பிறர் நம் மீது வல்லமை செலுத்த நினைப்பார்களே என்று யோசிக்கவில்லை. இன்று உலக பாதிப்பு என்பதை விட, அமெரிக்காவின் பாதிப்பில் தான் சீனா வல்லரசாக வலம் வரப் போகிறது..

    சீனா 89 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்புக்கான மருந்தை தர வியாபார ஒப்பந்தம் செய்துள்ளது.. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அமெரிக்கா சத்தமில்லாமல் பினங்களை பொதைத்து வருகிறது.

    மிக எளிதாக கொலை செய்து விட்டு சென்று விடும் அமெரிக்கர்களுக்கு, இறந்த பிணங்களை எவ்வளவு சிரமத்தோடுதான் அப்புறப் படுத்துவார்கள் என்பதை தற்போது தான் தெரிந்து கொண்டு வருகிறார்கள்..

    மரண ஓலத்தில் மகிழ்ச்சி கண்ட மக்களின் மரண ஒலத்தில் நிச்சியம் நமக்கு மகிழ்ச்சி காண அமெரிக்கர் போல் நமக்கு மனம் இல்லை.

    அனைத்து மக்களும் அமெரிக்க மக்கள் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்வோம்.

    முதல்முறையாக நாம் பதிவோம்
    #Pray_for_America...

    ReplyDelete
  4. Sainthamaruthuran கூறியது முற்றிலும் உண்மை. இதை அவர்கள் ஒரு பாடமாக எடுத்தார்கள் என்றால் அது அவர்களுக்குத்தான் நல்லது.
    அதேபோல் எமது நாட்டு இனவாதிகளும் இதில் இருந்து அதே பாடத்தை கற்க வேண்டும் . தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்து விட்டு பாட்சோறும் இனிப்புப் சாப்புட்டு மகிழ்ந்தார்கள் . அதே நேரத்தில் முள்ளிவாய்க்கால் அப்பாவி தமிழ் மக்கள் தமது அன்பு உறவினர்களின் உடல்களை வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது அதே இனவாத்த்தை முஸ்லிம் மக்கள் மீது தினித்து , சொத்துக்களை அழித்து உயிர்களை கொன்று இன்பம் காண்கிறார்கள். இதை இவர்கள் கைவிட வில்லை என்றால் இறைவனின் அடுத்த ரவ்ன்டில் இந்திய ,இலங்கை, மியன்மார் போன்ற நாடுகளில் இதே நிலைமையை காணலாம் . இறைவனின் தண்டனை பல ரூபத்தில் வரலாம் . அல்லாஹ்வின் படைகளை யாரும் அறிந்து கொள்ள முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.