Header Ads



பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு, நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் நன்றிகள்


முஸ்லிம்களின் மூலம் கொரோனா வைரஸ் பரப்பப்படுவதாக, போலியான குரல் பதிவை வெளியிட்ட நபரை சீ.ஐ.டி. யின் சிறப்புப் படை மூலம், கைது செய்யப்பட்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது.

தான் ஓரு உறவுத்துறை அதிகாரி என தன்னை, அடையாளப்படுத்தி ஒலி நாடா ஒன்றும் வெளியிடப்ட்டது.

இனவாதத்தை தூண்டும் இச்செயலுக்கு எதிரான பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கைக்கு,  நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் நன்றிகள் உரித்தாகட்டும் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உதவிச் செயலாளரும் சர்வமத அமைப்பின் உறுப்பினருமான மௌலவி எம்.எஸ்.எம். தாஸீம் குறிப்பிட்டார்.

குறிப்பாக பதில் பொலிஸ்மா அதிபர் விக்கிரமரத்னா மற்றும் ஒழுக்காற்று சட்டப்பிரிவின் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.

இதுபோன்ற செய்திகளை அதன் உண்மைத் தன்மைகளை அறியாமல் உடன் சமூக ஊடகங்கள் மூலம் உடனுக்குடன்  பரப்பும் செயலைவிட்டும் எமது சமூகத்தவர்கள் கவனமாக இருக்க வேண்டுமெனவும் தாஸிம் மௌலவி  மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. பாராட்டுக்கள் ஆனால் இன்னும் சில ஊடகங்கள் வெளிப்படையாக சிறுபான்மை மக்களை பகடைக்காயாய் பயன்படுத்தி இனவாத தீ மூட்டுகின்ரன.அவைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  2. இது போன்ற நல்லவர்களுக்கு நாம் எப்போதும் நன்றி செலுத்த கடமைப்பட்டு உள்ளோம்..
    THANKS

    ReplyDelete

Powered by Blogger.