Header Ads



அம்பாறையில் 75 பேர் வீடு திரும்பினர் - படங்கள்

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் நேரடி, இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 75 பேர், தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, நேற்று (28) தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வீடு திரும்பியவர்களுள், அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கான இரண்டாவது நபர் என அடையாளம் காணப்பட்ட பெண்ணும் அடங்குகின்றார் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இதனால் அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இருவரும் பூரண சுகம் பெற்று தமது இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வீடு திரும்பிய குறித்த பெண், அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் என அடையாளப்படுத்தப்பட்ட முதலாவது நபரின் மனைவியாவார். 

தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த 75 பேரும் கொரோனா தொற்று நோய் தடுப்பு செயற்பாட்டுக்கு  அமைவாக, 2020.04.28 முதல் 2020.05.11ஆம் திகதி வரை 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டுமென, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எம்.ஏ.றமீஸ், எஸ்.எம்.இர்ஷாத்



No comments

Powered by Blogger.