Header Ads



பன்னிப்பிட்டிய தனியார் ​வைத்தியசாலைக்கு பூட்டு - 73 ஊழியர்களுக்கு பரிசோதனை


பன்னிப்பிட்டியில் உள்ள தனியார் ​வைத்தியசாலை ஒன்றை தற்காலிகமாக மூடி அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தப்பட்டுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

பொரலஸ்கமுவ பகுதியில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் மேற்குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக தெரியவந்தனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வைத்தியசாலையின் 73 ஊழியர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட்டதுடன், அவர்களில் ஏழு பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை பிலியந்தலை பகுதியில் கொவிட் 19 தொற்றாளருடன் நெருங்கி பழகியவர்கள் மற்றும் சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டாவ சுகாதார பணிப்பாளர் இந்திக எல்லவல தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.