Header Ads



உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவுசெய்த 70 இற்கும் அதிகமானோர் தொடர்பில் விசாரணை


கொரோனா ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவு செய்த 70 இற்கும் அதிகமானோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாரும் குற்றப்புலானாய்வுத் திணைக்களத்தினரும் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் முன்னாள் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் ஒருவரும் வைத்தியர் ஒருவரும் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவரும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குகின்றனர்.

இதேவேளை, உண்மைக்கு புறம்பான தகவல்களை வௌியிடும் நபர்களை கண்டறிவதற்கு பல்வேறு பொலிஸ் குழுக்கள் செயற்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

1 comment:

  1. கண்ணுக்குப் புலப்படாத ஒரு வைரசுக்கு எதிராக உலகமே போராடிக் கொண்டிருக்கும் வேளையில் யாரும் எந்த மதத்தினரும் இதனை வலிந்து பரப்புவதில்லை. இதனை சாதாரண மனிதர்கள் யாவரும் அறிவர்.
    ஆனால் அசாதாரண மனிதர்கள் மட்டுமே தாற்பரியம் தெரியாமல் பொய்களையும் புனைவுகளையும் தமது வேசித்தனமான தளங்களில் பதிவேற்றுகின்றனர்.இவற்றின் பின் விளைவுகளை அவர்கள் அறுவடையும் செய்கின்றனர்.
    இச்சந்தர்ப்பத்தில் எமது அரசு, பாதுகாப்புப்படை, பொலிசார், சுகாதாரத்துறை போன்றவற்றை நாம் பாராட்டி கௌரவிக்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.