Header Ads



சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விட 50 வீதம் அதிகம்

சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விட ஐம்பது வீதம் அதிகம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வுகானில் கொரோனா வைரஸ் காரணமாக 2579 பேரே உயிரிழந்தனர் என தெரிவித்திருந்த அதிகாரிகள் இன்று மேலும் 1290பேரை உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக வுகானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3869 ஆக அதிகரித்துள்ளது

கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய ஆரம்பநாட்களில்  வைத்தியசாலைகளில் நிலவிய பற்றாக்குறைகள் மருத்துவ பணியாளர்களின்  பற்றாக்குறைகள் காரணமாக சில மருத்துவமனைகள் சீனாவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரிய தொடர்புகளை ஏற்படுத்தவில்லை என  சீனாவின் அரச ஒலிபரப்புஸ்தாபனமான சிஜிடின் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடுவதில் தவறுகள் ஏற்பட்டுள்ளன என அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதைவித அதிகமாகயிருக்கலாம் என்ற கருத்து காணப்பட்ட நிலையிலேயே இன்று இந்த தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த குடும்பத்தவர்களின் அஸ்தியை பெறுவதற்காகவும், அவர்களிற்கு இறுதிச்சடங்குகளை நடத்துவதற்காகவும் நீண்ட வரிசையில் பெருமளவானவர்கள் காத்திருப்பதை தொடர்ந்தே பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என்ற  கருத்து அதிகரிக்க தொடங்கியது.

No comments

Powered by Blogger.