Header Ads



50 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை, 10 லட்சம் பேருக்கு பாதிப்பு - அதிரும் உலக நாடுகள்


கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 10 லட்சத்து 940 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 321 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சிகிச்சை பெறுபவர்களில் 37 ஆயிரத்து 702 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 51 ஆயிரத்து 375 பேர் உயிரிழந்துள்ளனர். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 244 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

அமெரிக்கா - 5,624
இத்தாலி - 13,915
ஸ்பெயின் - 10,096
ஜெர்மனி - 1,089
சீனா - 3,318
பிரான்ஸ் - 4,503
ஈரான் - 3,160
இங்கிலாந்து - 2,921
சுவிஸ்சர்லாந்து - 536
துருக்கி - 356
பெல்ஜியம் - 1,011
நெதர்லாந்து - 1,339
கனடா- 134
ஆஸ்திரியா - 158
தென்கொரியா - 169
போர்ச்சீகல் - 209
பிரேசில் - 252
ஸ்வீடன் - 282
டென்மார்க் - 123
ஈக்வடார் - 120
ரூமெனியா - 114
பிலிப்பைன்ஸ் - 107
இந்தோனேசியா - 170

No comments

Powered by Blogger.