Header Ads



தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 4,526 பேர் வீடு திரும்பியுள்ளனர், 3, 292 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்


இந்தியாவிலிருந்து 164 பேர் நேற்று விசேட விமானம் மூலம் அழைத்து வரப்பட்டதாக கோவிட் 19 தடுப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டு நிலைய தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறினார்.

இவர்கள் ​ெபங்களூரிலிருந்து அழைத்து வரப்பட்டதோடு இவர்களிடையே இராணுவ வீரர்கள், அரச ஊழியர்கள் ஆகியோரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் இராணுவ தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் கீழுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 4,526 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றிய கடற்படை வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமாக பழகியவர்கள் ஆகியோரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இராணுவத்தின் கீழுள்ள 31 நிலையங்களில் 3, 292 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.