Header Ads



கடற்படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் 4000 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரர்க்ள மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 4000 பேரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி சிகிச்சையளிக்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள அனைவரையும் முதற்கட்டமாக பீ சீ ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளாதாகவும், கடற்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுள்ள கடற்படை வீரர் ஒருவருடன் நெருங்கிய பழகிய பின்னர் விடுமுறைக்காக வீடுகளுக்கு சென்றுள்ள கடற்படை வீரர்களை மீண்டும் மத்திய நிலையத்திற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர் விடுமுறையில் சென்றிருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று காணப்படுவதாக கண்டறியப்பட்டதனை தொடர்ந்து அவருடன் பழகிய அனைவரும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், விடுமுறையிலோ அல்லது வேறு விதங்களிலோ முகாமினை விட்டு வெளியேறியுள்ளவர்கள் தொடர்பில் விபரங்களை அறிய 0112 445368 அல்லது 011 7192251 என்ற இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு 

011 2441454 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாகவோ அல்லது 077 2201365 வட்ஸ்ஏப் இலக்த்தினூடாகவோ தொடர்புகளை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் nhqdno@yahoo.com என்ற மின் அஞ்சல் வாயிலாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.